NATIONAL

குகைக்குள் சிக்கி கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு

ஈப்போ, ஜூன் 21: நேற்று சாம் போ தோங் குகைக்குள் சிக்கி கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை (ஜோடி) பேராக் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) வெற்றிகரமாக மீட்டது.

இச்சம்பவம் குறித்து அக்குகைக்குள் சிக்கிய ஒருவரிடமிருந்து தனது தரப்பு பிற்பகல் 2.26 மணிக்குப் புகார் பெற்றதாகப் பேராக் ஜேபிபிஎம் செயல் பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அஹ்மட் கூறினார்.

“சீன ஆணும், தென் கொரிய பெண்ணும் குகைக்குள் பத்திரமாக இருந்ததாகவும், குகையின் பிரதான நுழைவாயில் மூடப்பட்டதால் அவர்கள் சிக்கிக் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது” என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும், 30 வயது மதிக்கத்தக்க இருவருக்குமே காயம் ஏதும் ஏற்படவில்லை என்றார்.

“சுமார் 30 நிமிடங்களில் மீட்பு நடவடிக்கை நிறைவடைந்தது. குகைக் கதவு பாதுகாப்புக் காவலர்களால் மீண்டும் திறக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :