NATIONAL

சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுக்கான 14,417 நோட்டீஸ்களை ஜேபிஜே வெளியிட்டது

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 21: ஜூன் 10 முதல் 19 வரை மேற்கொண்ட ஓப்ஸ் ஹரி ராய ஐடில்ஹடா (HRAA) 2024 சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுக்கான 14,417 நோட்டிஸ்களை சிலாங்கூர் சாலைப் போக்குவரத்து துறை (ஜேபிஜே) வெளியிட்டது.

மொத்தம் 11,118 சம்மன் நோட்டீஸ்கள், 1,338 வாகனத் தடைகள், 1,407 வாகன சோதனை உத்தரவுகள் மற்றும் 554 வாகன பறிமுதல் நோட்டிஸ்கள் வழங்கப்பட்டன என சிலாங்கூர் ஜேபிஜே துணை இயக்குநர் டத்தோ அகமட் கமருஞ்சமான் மெஹாட் கூறினார்.

“அதிகமாக பதிவு செய்யப்பட்ட குற்றங்களில் 4,697 தொழில்நுட்ப சிக்கல்கள், அதைத் தொடர்ந்து தகுதிவாய்ந்த ஓட்டுநர் உரிமம் இல்லாமை (3,022), காலாவதியான மோட்டார் வாகன உரிமம் (2,320), காப்பீட்டுத் தொகை இல்லை (1,893) மற்றும் பிற குற்றங்கள் ஆகியவை அடங்கும்.

ஜூன் 30 ஆம் தேதி வரை செயல்படுத்தப்படும் இச்சோதனை நடவடிக்கை சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்புகளின் விகிதத்தைக் குறைக்கும் நோக்கத்தில் செயல்படுத்தப் படுவதை உறுதி செய்யப்படும் என நேற்று சன்வே டோல் பிளாசாவில் சந்தித்தபோது அவர் கூறினார்.

நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கி சுமார் நான்கு மணி நேரம் டோல் சாவடியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் 1,220 வாகனங்கள் சோதனை செய்யப்படன. அதில் 318 குற்றங்கள் கண்டறியப்பட்டதாக அஹ்மட் கமருஞ்சமான் கூறினார்.

ஓட்டுநர் உரிமம் இல்லை, காப்பீட்டுத் தொகை இல்லை, காலாவதியான மோட்டார் வாகன உரிமம், தொழில்நுட்பக் கோளாறுகள், கண்ணாடிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“ஜேபிஜே 261 சம்மன்களை வழங்கியது மற்றும் 23 வாகனங்களை பறிமுதல் செய்தது. அதே நேரத்தில் வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் 16 நோட்டிஸ்களுடன் கூடுதலாக 18 வாகனங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :