NATIONAL

ஊழலில் ஈடுபடும் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளின் உரிமம் ரத்து செய்யப்படும்

சிரம்பான், ஜூன் 23: தேர்ச்சி பெறாதவர்களுக்கு உடனடி உரிமம் அல்லது ‘காபி ஓ’ மூலம் வாகனம் ஓட்டும் உரிமம் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கண்டறியப்படும்,  நிறுவனங்களின் இயக்க உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும்.

இது போன்ற செயல்கள் சாலையைப் பயன்படுத்துபவர்களின், குறிப்பாக இளைஞர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், ஓட்டுனர் பயிற்சி துறையில் ஊழல் நடவடிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

“வாகனம் செலுத்த கற்று தரும் நிறுவனங்கள் ஊழலில் ஈடுபடக்கூடாது. அதை ஒழிக்கா விட்டால், இளைஞர்கள் பலியாவார்கள், நாங்கள் மனித உயிரைக் காப்பாற்ற விரும்புகிறோம்.

“சமூக ஊடக  விளம்பரங்களில் பறக்கும் உரிமம் எனும் சரியான தேர்ச்சியற்றவர்களுக்கு உடனடி ஓட்டுனர் உரிமம்  வழங்கும் விளம்பரங்களை  கண்டு மக்கள் எளிதில் ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப் பட்டார்கள்,

இங்கு “RDS Driving Academy Sdn Bhd“ மற்றும் Orang Asli L உரிமத் திட்டத்தின் 10வது ஆண்டு விழாவில் பேசுகையில் அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து, ஓட்டுனர் சோதனை துறையில் ஊழலின் அறிகுறிகளைக் களைய அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு செயல்திறன் மற்றும் நேர்மை நடவடிக்கையாக மின்னணு ஓட்டுனர் பயிற்சி மற்றும் சோதனை முறையை (eTesting) செயல்படுத்துவது குறித்து லோக் விளக்கினார்.

மேலும், 2030 ஆம் ஆண்டில் அதன் பயன்பாடு கட்டாயமாக்கப் படுவதற்கு முன்பு, ஓட்டுனர் நிறுவனங்கள் இந்த (eTesting) அமைப்பின் பயன்பாட்டைப் பற்றித் தெரிந்து கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

“நேர்மையான ஒரு முறையை உறுதி செய்வதற்காக அமைச்சகம் eTesting ஐ ஆர்வத்துடன் செயல்படுத்துகிறது.

“பறக்கும் உரிமத்தின் அறிகுறிகளைப் பற்றி நாங்கள் நீண்ட காலமாக கேள்விப்பட்டு வருகிறோம். நாங்கள் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் முயற்சிகளைத் தொடருவோம்” என்று அவர் கூறினார்.

கடந்த ஏப்ரலில் eTesting அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, eTesting-ஐ செயல் படுத்துவதற்கு ஓட்டுனர் பயிற்சி நிறுவனங்களிடமிருந்து தனது தரப்பு பல விண்ணப்பங்களை பெற்றுள்ளதாக லோக் கூறினார்.

சாலைப் போக்கு வரத்துத் துறை (ஜேபிஜே) விண்ணப்பங்களை ஆய்வு செய்து வருகிறது. அங்கீகாரம் பெறும் முதல் குழு விரைவில் அனுமதி கடிதங்களைப் பெறும் என்றார்.

– பெர்னாமா


Pengarang :