NATIONAL

சாலையில் விழுந்து கிடந்த மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் கணவன் மனைவி பலத்த காயம்

கங்கார், ஜூன் 23: இன்று காலை ஜாலான் கம்போங் பாடாங் பெந்தாவில் சாலையில் விழுந்து கிடந்த மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் கணவன் மனைவி பலத்த காயமடைந்தனர்.

அதிகாலை 3 மணியளவில் நடந்த இச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட முகமட் டேனிஷ் ஹக்கீம் ஹனிசாம் (18), என்பவருக்கு வலது தொடை எலும்பு முறிந்ததாகவும், அவரது மனைவி நுரலேயா சியாஸ்ரீனா ரோஸ்லான் அனுவார்(18), என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு, வலது மற்றும் இடது இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் கங்கார் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் பேயா அப்துல் வஹாப் தெரிவித்தார். மேலும், கருவில் இருந்த அவர்களின் ஐந்து மாத குழந்தையும் இறந்ததாக குறிப்பிட்டார்.

“அவர்கள் சுங்கை பாரு, சிம்பாங் எம்பாட்டிலுள்ள உணவகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் கம்போங் சுங்கை புகிஸில் உள்ள அவர்களின் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நேர்ந்தது.

பாதிக்கப்பட்ட இருவரும் மேல் சிகிச்சைக்காக துவாங்கு  வெளசியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அப்துல் வஹாப் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :