NATIONAL

பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக நம்பப்படும் 16 ஆப்பிரிக்க பெண்கள் கைது

கோலாலம்பூர், ஜூன் 23: நேற்று இரவு பட்ஜெட் ஹோட்டலில் நடத்தப்பட்ட சோதனையில் புக்கிட் பிந்தாங்கில் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக நம்பப்படும் 16 ஆப்பிரிக்க பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், 21 முதல் 40 வயதுக்குட்பட்ட குறிப்பிட்ட பெண்கள் அனைவரும் சுற்றுலா பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் RM100 விலையில் பாலியல் நடவடிக்கையில் சமீபகாலமாக ஈடு பட்டுள்ளனர் என டாங் வாங்கி மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி நோர் டெல்ஹான் யஹாயா கூறினார்.

புக்கிட் பிந்தாங்கை சுற்றி வாடிக்கையாளர்களைப் பெற சாலையோரத்தில் நிற்கும் யுக்தியை இந்தப் பெண்கள் பயன் படுத்துகின்றனர். பின்னர், தினசரி வாடகைக்கு எடுக்கப்பட்ட பட்ஜெட் ஹோட்டல் அறைக்கு வாடிக்கையாளர்களை அழைத்துச் செல்கின்றனர் என அவர் கூறினார்.

“அப்பெண்கள் அதிகாரிகளால் கண்டறியப் படுவதைத் தவிர்ப்பதற்காகப் பட்ஜெட் ஹோட்டல்களை அடிக்கடி மாற்றுவது கண்டறியப்பட்டது.

இந்தச் சோதனையில், 40 ஆணுறைகள், 10 டியூப் லூப்ரிகேட்டிங் ஜெல், 14 கைப்பேசிகள் மற்றும் 800 ரிங்கிட் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

அவர்கள் அனைவரும் குற்றவியல் சட்டப்பிரிவு 372B மற்றும் குடிவரவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 6 (1) (c) ஆகியவற்றின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டு, இன்று விளக்கமறியலில் வைக்க விண்ணப்பம் செய்யப்படும்.

பொதுமக்கள் மற்றும் ஹோட்டல் தரப்பினர் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் குறித்து புகார் அளித்து ஒத்துழைக்குமாறு நோர் டெல்ஹான் கேட்டுக் கொண்டார்.

– பெர்னாமா


Pengarang :