SELANGOR

ஓராங் அஸ்லி சமூகத்தினருக்குப் புதிய வீடுகள் கட்டுவதற்கு மாநில அரசு RM1 மில்லியன் ஒதுக்கீடு

உலு சிலாங்கூர், ஜூன் 24: இந்த ஆண்டு சிலாங்கூரில் உள்ள நான்கு மாவட்டங்களில் ஓராங் அஸ்லி சமூகத்தினருக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கு மாநில அரசு RM1 மில்லியனை ஒதுக்கியுள்ளது.

உலு சிலாங்கூர், உலு லங்காட், சிப்பாங் மற்றும் கோலா லங்காட் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 13 வீடுகள் கட்டப்பட்டன என ஓராங் அஸ்லி சமூக நலன் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு தெரிவித்தார்.

ஓராங் அஸ்லியின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் இந்த திட்டமானது எம்பிஐயின் ஒத்துழைப்பு மூலம் செயல்படுத்தப்பட்டது.

“13 வீடுகளில் 6 வீடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை இன்னும் கட்டுமானப் பணியில் உள்ளன, மேலும் இந்த ஆண்டு இறுதியில் சாவியை நாங்கள் வழங்குவோம்.

“ஓராங் அஸ்லி மக்களும் பாதுகாப்பான மற்றும் வசதியான வீட்டைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்” என்று அவர் கூறினார்.

வீட்டில் இரண்டு அறைகள், இரண்டு குளியலறைகள் மற்றும் மூன்று அறைகள், இரண்டு குளியலறைகள் என இரண்டு பிரிவுகள் உள்ளதாக பாப்பாராய்டு கூறினார். அதன் விலை RM55,000 தொடங்கி RM85,000 வரை கொண்டுள்ளது.

இந்த வீடுகளுக்கான கட்டுமான செலவு வேறுபட பல காரணங்கள் உள்ளன, அவை அமைந்திருக்கும் இடம், குறிப்பாக காட்டின் உட்புறங்களில், நடைபாதை மற்றும் சாலை வசதி இல்லா இடங்களுக்கு சென்று வீடு அமைப்பதும் ஒன்றாகும் என்றார்

“இருப்பினும், இந்த திட்டம் இதுவரை நிறுத்தப்படவில்லை. ஓராங் அஸ்லி சமூகம் நவீனமயமாக்கலின் ஓரம் கட்டப்படவில்லை மற்றும் எப்போதும் மரியாதையுடன் நடத்தப்படுவதை உறுதிசெய்ய நாங்கள் தொடர்ந்து உதவுவோம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :