NATIONAL

பெண் ஒருவரின் பொருட்களைத் திருட முயன்ற நபர் கைது

புத்ராஜெயா, ஜூன் 24: சிப்பாங்கில் உள்ள சவுத்வெளி  நகரில் சீனப் பெண்ணின் மதிப்புமிக்க பொருட்களைத் திருட முயன்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. இச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் நபரை கடந்த வாரம் காவல்துறையினர் கைது செய்தனர்.

அந்நபர் (33) மாலை 4 மணியளவில் கம்போங் ஜெண்டராம் ஹிலிரில் கைது செய்யப்பட்டதாக சிப்பாங் மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் வான் கமருல் அஸ்ரான் வான் யூசோப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறினார்.

சவுத் வெளி நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் நடந்த இச்சம்பவத்தை பதிவு செய்த நபர் மூலமாகத் தனது தரப்புக்குப் புகார் கிடைத்ததாக அவர் கூறினார்.

“சந்தேக நபர் வேலையில்லாதவர் மற்றும் இதற்கு முன் அவருக்கு குற்றப் பதிவு எதுவும் இல்லை. சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டது,” என்று வான் கமருல் கூறினார். அந்நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, குற்றவியல் சட்டம் பிரிவு 393 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டது.

பொதுமக்கள் எந்தவித ஊகங்களையும் செய்ய வேண்டாம் என்றும், இந்த சம்பவம் குறித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

– பெர்னாமா


Pengarang :