NATIONAL

பாலஸ்தீனத்திற்கு எதிரான போருக்கு முடிவு கட்டும் முயற்சிகளுக்கு மலேசியா தொடர்ந்து ஆதரவளிக்கும்

கோலாலம்பூர், ஜூன் 24 – பாலஸ்தீனர்களுக்கு எதிரான அட்டூழியங்களை முடிவுக்குக் கொண்டுவரும் எந்தவொரு முயற்சிக்கும் மலேசியா தொடர்ந்து ஆதரவளிக்கும் எனக் கூறிய வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான், அந்நாட்டில் மக்கள் கொல்லப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும்  வலியுறுத்தினார்

இந்நிலையில், காஸாவில் போர் நிறுத்தத்தை  அமல்படுத்துவதற்காக எதிர்வரும் ஜூன் 10ஆம் தேதி அமெரிக்கா தாக்கல் செய்யும் பரிந்துரையை மலேசியா ஆதரவளிக்கும்.

சமீபத்தில், அதாவது   ஜூன் மாதம்  அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட மூன்று கட்ட போர்நிறுத்த தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றம்  வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரித்தது.

இது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ஏனென்றால் பொதுவாக, ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தில் அமெரிக்கா ஒரு திட்டத்தை முன்வைத்தால் மற்ற நாடுகள் அதை ஆதரிக்காது.

பாலஸ்தீன மக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் மற்றும் கொலைகள் நிறுத்தப்படுவதை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பதை இப்போது நாம் பார்க்க விரும்புகிறோம். இரு நாட்டுத் தீர்வு உட்பட எந்த நிலையிலும் தீர்வுக்கான முயற்சிகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம் என்று அவர் இன்று மக்களவையில் அவர் இன்று கூறினார்.

மக்களவையில் இன்று, காஸாவில் பாலஸ்தீன மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக இரு நாடுகளின் தீர்வுக் கொள்கையை மறுபரிசீலனை செய்வது செய்வது அரசாங்கத்தின் நோக்கம் குறித்து  மாராங் உறுப்பினர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் முகமது இவ்வாறு கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்த மூன்று கட்ட காசா போர்நிறுத்த முன்மொழிவை ஆதரிக்கும் தீர்மானத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு மன்றம்
ஜூன் 10ஆம் தேதி  ஒப்புதல் அளித்தது.

இந்த தீர்மானத்தை பாதுகாப்பு மன்றத்தின் 15  உறுப்பு நாடுகளில் 14 ஆதரித்து வாக்களித்தன. ரஷியா வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.


Pengarang :