NATIONAL

“சாகு“ மரம் விழுந்து ஒருவர் உயிரிழந்தார்

கோலா திரங்கானு, ஜூன் 25: கம்போங் கோலாம், மெங்காபாங் தெலிபோட் என்ற இடத்தில் ஆடு வளர்க்கும் ஒருவர் “சாகு“ மரம் விழுந்து உயிரிழந்தார்.

மதியம் சுமார் 1.30 மணியளவில் சம்பவ நடந்த இடத்திற்குப் பாதிக்கப்பட்டவரின் தந்தை அவரை சந்திக்க வந்தார். அங்கு பாதிக்கப்பட்ட முகமட் முவாகில் முகமட் சப்ரி (26), மயங்கிய நிலையில் கிடந்தது அவரது தந்தையால் கண்டு அறியப்பட்டது.

புகாரைப் பெற்றவுடன் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என கோலா திரங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அஸ்லி முகமட் நோர் கூறினார். பாதிக்கப்பட்டவர் மேல் நடவடிக்கைக்காகச் சுல்தானா நோர் சாஹிரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

“இச்சம்பவம் கிராமத்தில் தொழிலாளியாகப் பணிபுரியும் பாதிக்கப்பட்டவரின் சகோதரரால் புகார் அளிக்கப்பட்டது. தனது வளர்ப்பு ஆடுகளுக்கு உணவளிப்பதற்காக வெட்டிய சாகு மரம் விழுந்து, தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாகப் பாதிக்கப்பட்டவர் இறந்துள்ளார்” என்று அஸ்லி கூறினார்.

இந்தச் சம்பவத்தில் குற்றவியல் கூறுகள் எதுவும் இல்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டதாகவும், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.


Pengarang :