SELANGOR

215 சட்டவிரோதக் குப்பை கொட்டும் நடவடிக்கைகள் கண்டறியப்பட்டன

உலு லங்காட், ஜூன் 25: சிலாங்கூர் அரசாங்கம் 2018 முதல் கடந்த ஆண்டு வரை 215 சட்டவிரோதக் குப்பை கொட்டும்  நடவடிக்கைகளைக் கண்டறிந்தது.

ஊராட்சி மன்றம் (பிபிடி), மாவட்ட மற்றும் நில அலுவலகம், சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகியவற்றின் அமலாக்கத்தின் மூலம் இச்செயல்கள் கண்டறியப்பட்டன என உள்ளூர் அரசாங்க ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.

தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் அமலாக்கத்தின் மூலம் சட்டவிரோத குப்பைகளை அகற்றும் நடவடிக்கையின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இப்போது 57 இடங்கள் மட்டுமே உள்ளன என டத்தோ எங் சூயி லிம் தெரிவித்தார்.

“இவ்வளவுதான் நாங்கள் அடையாளம் காண முடிந்தது. இந்த மாநிலத்தில் இன்னும் பல இடங்களில் சட்டவிரோதக் குப்பைகள் அகற்றும் நடவடிக்கைகள் நடக்கின்றன. அவை இன்னும் எங்கள் பார்வையில் தெரியாமல் இருக்கலாம். .

“ஊராட்சி மன்றங்கள், நிலம் மற்றும் மாவட்ட அலுவலகம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களை இந்த சட்டவிரோத நடவடிக்கையை கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம், அவற்றின் எண்ணிக்கையை குறைக்க முடியும்,” என்று அவர் கூறினார்.

இன்று மஹ்கோத்தா செராஸ் நகரில் சட்டவிரோதக் கழிவு தளத்தை சோதனை செய்த போது அவர் இவ்வாறு கூறினார்.

சட்டவிரோத சிண்டிகேட்டிற்கு அபராதங்கள் வழங்க வேண்டாம் என்று இங் சுய் லிம் தெரிவித்தார். மாறாக பறிமுதல் அல்லது நீதிமன்றத்தில் வழக்குத் தொடருதல் போன்ற கடுமையான தண்டனைகளை விதிக்க வேண்டும்.

அபராதங்கள் சில நேரங்களில் அவர்கள் செய்யும் தவறை உணர வைக்காது. ஆனால், அவர்கள் பயன்படுத்தும் இயந்திரங்கள் அல்லது லாரிகளை நாங்கள் பறிமுதல் செய்தால் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், அவை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

“தண்டனை பெறுவதிலிருந்து தப்பிக்க விரும்பினால், குப்பைகளை சரியான இடத்தில் வீசுமாறு நான் அவர்களை எச்சரிக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, காஜாங் நகராண்மை கழகம், சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகியவற்றுடன் அவர் அவ்வட்டாரத்தில் கண்காணிப்பை மேற்கொண்டார்.

சட்டவிரோதக் குப்பை கொட்டும் இடமாகப் பயன்படுத்தப்படுவதாகச் சந்தேகிக்கப்படும் இடங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

மேலும், “இந்த சட்டவிரோத நடவடிக்கை தொடர்பான தகவல் அல்லது ஆதாரங்கள் இருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குத் தெரிவிப்பதன் மூலம் நடவடிக்கை எடுக்க உதவ பொதுமக்களின் ஒத்துழைப்பை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :