NATIONAL

சொந்த தாயை கொன்றதாகக் கே. எஸ் சுகன் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஈப்போ, ஜூன் 25: ஜூன் 12ஆம் தேதி அன்று தாமான் ரெஸ்து ஜெயா, பெர்சாமின் உள்ள வீடு ஒன்றில் தனது சொந்த தாயைக் கொன்ற குற்றச்சாட்டில் வேலையில்லாத நபர் ஒருவர் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

மாஜிஸ்திரேட் சித்தி நோரா ஷெரீப் முன்னிலையில் தமிழில் தனக்கு எதிரான குற்றச்சாட்டை வாசித்த பிறகு அதை புரிந்து கொண்டு 36 வயதான கே. எஸ் சுகன் தலையசைத்தார். ஆனால், கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால் எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த ஜூன் 12ஆம் தேதி அதிகாலை 1 மணி முதல் காலை 9.30 மணிக்குள் தாமான் ரெஸ்து ஜெயாவில் உள்ள வீடு ஒன்றில் தனது தாய் எஸ் இந்திரா (60) என்பவரைக் கொன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மரண தண்டனை அல்லது 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் தண்டனைச் சட்டப் பிரிவு 302 இன் கீழ் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது 12 பிரம்படியுடன் மரண தண்டனை விதிக்க இடமுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகாமல் இருந்த நிலையில், அரசுத் துணை வழக்கறிஞர் நோரானிசா இஸ்மா முகமட் ஹுசைனி வழக்கை நடத்தினார்.

இதையடுத்து, வழக்கை மீண்டும் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் வீடொன்றில் இரத்த வெள்ளத்தில் மூதாட்டியின் சடலம் காணப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.

பிரேதப் பரிசோதனையில், பாதிக்கப் பட்டவரின் தலை மற்றும் கழுத்தில் காயங்கள் இருப்பதைக் கண்டறியப்பட்டன. மேலும், அந்த வழக்கு கொலை வழக்காக வகைப்படுத்தப்பட்டது.

– பெர்னாமா


Pengarang :