NATIONAL

சிலாங்கூர் சட்டமன்றம் ஜூலை 4ஆம் தேதி தொடங்குகிறது- விவாதங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்

ஷா ஆலம், ஜூலை 1- இம்மாதம் 4ஆம் தேதி தொடங்கி இரு
வாரங்களுக்கு நடைபெறும் சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டத் தொடரை
பொது மக்கள் யுடியூப் சிலாங்கூர் டிவி அல்லது மீடியா சிலாங்கூர்
பேஸ்புக் வாயிலாக நேரடியாகக் காணலாம்.

மேலும், அவையின் அன்றாட நிகழ்வுகளை சிலாங்கூர்கினி வாயிலாகவும்
மாண்டரின், தமிழ் மற்றும் ஆங்கில பதிப்புகள் வழியாகவும் அறிந்து
கொள்ளலாம்.

இந்த கூட்டத் தொடரில் முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் (ஆர்.எஸ்-1)
மத்திய தவணைக்கான ஆய்வறிக்கையை மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி தாக்கல் செய்வார் என்று சட்டமன்ற சபாநாயகர் லாவ்
வேங் சான் கூறினார்.

சாப்டா எனப்படும் சபாக் பெர்ணம் வட்டார மேம்பாடு, இட்ரிஸ் எனப்படும்
தென் சிலாஙகூர் ஒருங்கிணைந்த மேம்பாட்டு வட்டாரம் மற்றும் கெர்பாங்
மெரிடைம் சிலாங்கூர் (எஸ்.எம்.ஜி.) ஆகிய திட்டங்கள் தொடர்பான
மேம்பாடுகளும் அதில் உள்ளடங்கியிருக்கும்.

பொருளார வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தர உயர்வை
சமநிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பதினான்கு பரந்த
குறிப்பீடுகளை உள்படுத்திய முதலாவது சிலாங்கூர் திட்டம்
ஈராண்டுகளுக்கு முன்னர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

நான்கு அடிப்படைக் கூறுகள், ஐந்து உந்து சக்தி கொள்கைகள் மற்றும் 262
திட்டங்கள் 19 மாற்ற முன்னெடுப்புகள் வாயிலாக நடப்பு சவால்களை
எதிர்கொள்வதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் நான்கு கேந்திர முக்கியத்துவம்
வாய்ந்த அடிப்படைக் கூறுகளில் பொருளாரத்தை வலுப்படுத்துவது,
மக்களின் நல்வாழ்வு மற்றும் சமூக உள்ளடக்கத்தை உருவாக்குவது, நிலைத்தன்மை நிகழ்ச்சி நிரலை உருவாக்குவது, நிர்வாகத் திறனை மேம்படுத்துவது ஆகியவை அடங்கியுள்ளன.

இந்த கூட்டத் தொடரின் முதல் நாளில் அண்மையில் நடைபெற்ற கோல
குபு பாரு இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாங் சோக் தாவோ
பதவியேற்பு நிகழ்வு நடைபெறும் என்று லாவ் தெரிவித்தார்.


Pengarang :