NATIONAL

ஊழல் குற்றங்களுக்காகச் சுமார் 2,332 இளைஞர்கள் கைது

கோலாலம்பூர் ஜூலை 1 – பல்வேறு ஊழல் குற்றங்களுக்கான 2019 முதல் ஐந்து ஆண்டுகளில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் 16 முதல் 40 வயதுடைய சுமார் 2,332 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் லஞ்சம், தவறான உரிமைகோரல்கள், பதவியை துஷ்பிரயோகம் செய்தல், பணமோசடி மற்றும் பிற தொடர்புடைய குற்றங்கள் உள்ளடங்குவதாக சமூகக் கல்விப் பிரிவு இயக்குநர் நஸ்லி ரசிட் சுலோங் தெரிவித்தார்.

இந்த புள்ளி விபரங்கள் இளைஞர்களிடையே ஊழலின் தீவிரத்தை சித்தரிக்கின்றன. இது சமூகத்தில் சாதாரணமாக மாறுவதைத் தடுக்க கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

“இது தொடர்ந்தால், பத்து ஆண்டுகளில் என்ன நடக்கும்? பின், நம்மால் எதையும் மாற்ற முடியாமல் போகலாம், ஏனென்றால் அது வாழ்க்கையின் இயல்பான ஒன்றாக மாறிவிடலாம்.

” தற்போது இளைஞர்களுக்குக் குறிப்பாக நாட்டின் நம்பிக்கை மற்றும் எதிர்கால தலைவர்களான மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது” என்று பெர்மாத்தா கேம், அலோர் காஜா, மலாக்காவில் நடந்த 9வது ஊழல் எதிர்ப்பு மாணவர் படை (அமார்) மாநாட்டின் நிறைவு விழாவில் அவர் கூறினார்.

17 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட அமார், 816,734 மாணவர்களின் பங்கேற்புடன் மொத்தம் 2,988 திட்டங்களைச் செயல்படுத்தி, வளாகங்கள் முழுவதும் ஊழலுக்கு எதிரான செய்தியை தீவிரமாகப் பரப்பி வருகிறது.

“ஊழல் இல்லாத நாட்டையும் சமூகத்தையும் விரும்பும் மலேசிய குடிமக்களாக தங்கள் சமூகப் பொறுப்பை அமார் உறுப்பினர்கள் நிறைவேற்றுகிறார்கள்,” என்று அவர் கூறினார். நாடு முழுவதும் ஊழல் எதிர்ப்புச் செய்தியைப் பரப்புவதில் அமார் தொடர்ந்து முயற்சிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

– பெர்னாமா


Pengarang :