SELANGOR

ஏடிஸ் கொசு ஒழிப்பு பிரச்சாரம் – எம்பிஏஜே

ஷா ஆலம், ஜூலை 1: நேற்று யூகே பெர்டானாவில் உள்ள ஸ்ரீ புத்ரி அடுக்குமாடி குடியிருப்பில் ஏடிஸ் கொசு ஒழிப்பு பிரச்சாரத்தை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) மற்றும் கோம்பாக் மாவட்ட சுகாதார அலுவலகம் (பிகேடி) வெற்றிகரமாக நடத்தின.

கூட்டு நிர்வாகக் குழு (JMB) மற்றும் அபார்ட்மெண்ட் சூராவ்களுடன் இணைந்து குடியிருப்போர் அமைப்புகள் ஏற்பாடு செய்யப்பட்ட ஏடிஸ் கொசு ஒழிப்பு மற்றும் சுற்றுப்புற துப்புரவு கூட்டு பணி மற்றும் டிங்கி காய்ச்சல் பற்றிய விளக்கத்துடன் தொடங்கியது.

இந்நிகழ்வில் குடியிருப்புகளை சுத்தப்படுத்துதல், குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டும் போட்டிகள், டிங்கி சோதனைகள் மற்றும் ஏடிஸ் கொசு புழுக்களைக் கண்டறிதல் போன்ற நடவடிக்கைகள் இடம் பெற்றன.

கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறக்கூடிய பொருட்களை எளிதாக அப்புறப்படுத்த ரோல் ஆன் ரோல் ஆஃப் (RORO) தொட்டிகளையும் குடியிருப்பாளர்களுக்கு எம்பிஏஜேயின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஏற்பாடு செய்தது.

கூடுதலாகச் சமையல் எண்ணெய், பயன்படுத்திய மின் கருவிகள், காகிதம், பெட்டிகள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் போன்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை எம்பிஏஜே வாழங்கியது. அதுமட்டுமில்லாமல், குடியிருப்பாளர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து விநியோகித்தது.


Pengarang :