SELANGOR

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிலாங்கூரின் பங்களிப்பு 25.9 விழுக்காடாக அதிகரிப்பு

ஷா ஆலம், ஜூலை 2 – மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.)  அதிகபட்ச பங்களிப்பை அதாவது 25.9 விழுக்காட்டை கடந்தாண்டு வழங்கியதன் மூலம்  தேசியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பாளராக சிலாங்கூர்  தொடர்ந்து திகழ்ந்து வருகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டில்  பதிவு செய்யப்பட்ட 25.5 விழுக்காட்டு ஜி.டி.பி. பங்களிப்புடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகமாகும்.

2023ஆம் ஆண்டிற்கான மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி  அறிக்கையின் அடிப்படையில்  புள்ளி விபரத் துறை இந்த  தரவுகளை வெளியிட்டுள்ளது.

தேசிய அளவீடான 3.6 சதவீதத்தை விட அதிக வளர்ச்சியைப் பதிவு செய்த நான்கு மாநிலங்களில் ஒன்றாக சிலாங்கூர் விளங்குகிறது என்று இன்று வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்தது.

சிலாங்கூரின் பொருளாதாரம் 5.4 விழுக்காடாக வளர்ச்சி கண்டுள்ளது. இது மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகமாகும். சிலாங்கூருக்கு அடுத்து பகாங் (5.2 சதவீதம்), ஜோகூர் (4.1 சதவீதம்) மற்றும் கோலாலம்பூர் (3.7 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.


Pengarang :