NATIONAL

சந்தேக நபரை போலீசார் 3 கி.மீட்டர் துரத்திச் சென்று பிடித்தனர்

புத்ராஜெயா, ஜூலை 2 – டெங்கிலில்  உள்ள ஜாலான் கித்தா  இம்பியான், சைபர்சவுத் என்ற இடத்தில் நேற்று போதைப்பொருளுக்கு அடிமையானவர் என சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் மூன்று கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று கைது செய்தனர்.

நேற்றிரவு 9.30 மணியளவில் இருத்தொன்பது வயதுடைய அவ்வாடவர் ஓட்டிச் சென்ற பெரேடுவா பெஸ்ஸா  காரை போலீசார் சந்தேகத்தின் பேரில்  நிறுத்த கட்டளையிட்டதாகவும் ஆனால்,  அவர் காரை நிறுத்தாமல் வேகமாகச் சென்றதாகவும் சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர்  ஏசிபி வான் கமாருளா அஸ்ரான் வான் யுசுப் கூறினார்.

சந்தேக நபரின் காரை சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம்  போலீஸ் ரோந்து வாகனத்தில்   துரத்திச் சென்ற  போலீசார்,  இரவு 9.50 மணியளவில் அந்நபரைக் கைது செய்தனர். இந்த துரத்தலின்போது  சந்தேக நபர் ஓட்டிச் சென்ற காருக்கும் போலீஸ் ரோந்துக் காருக்கும் இடையில் விபத்து ஏற்பட்டது என அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்  முந்தைய குற்றப் பதிவுகளைக் கொண்டுள்ளது தொடக்ககட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதோடு அவ்வாடவர்  மெத்தம்பெத்தமின் மற்றும் ஆம்பெத்தமின் உள்ளிட்ட போதைப்பொருள்களை பயன்படுத்தியுள்ளது  சோதனையில் கண்டறியப்பட்டது என்றார் அவர்.

இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 186 மற்றும் பிரிவு 279 இன் கீழ்  விசாரிக்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

– பெர்னாமா


Pengarang :