NATIONAL

4,000க்கும் மேற்பட்ட  சௌஜனா புத்ரா குடியிருப்புகளுக்கு போக்குவரத்தை இலகுவாக்க பாலம் – மந்திரி புசார்

கோலா லங்காட், ஜூலை 7: நேற்று இரவு 820 மீட்டர் நீளமுள்ள பண்டார் சௌஜானா புத்ரா மேம்பாலத்தை டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி திறந்து வைத்தார்.

இப்பாலம்  RM70 மில்லியன் செலவில் கட்டப்பட்டது, நள்ளிரவு 12.01 மணிக்குத் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தவுடன் பயனர்களுக்கும் உடனடியாகத் திறக்கப்பட்டது.

அமிருடின் அவர்கள் கொடியசைத்து  மேம்பாலம் வழியாகச் செல்லும் பயனர்களுக்குப் பெர்மோடாலன் நெகிரி சிலாங்கூர் பெர்ஹாட் (பிஎன்எஸ்பி) வழங்கிய ‘குடீஸ் பேக்குகளை’ விநியோகித்து மூலம் குறியீட்டு வெளியீட்டையும் நிறைவு செய்தார்.

மேலும், இதில் உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹாஷிம், மாநில சட்டப் பேரவையின் (தொகுதி) சபாநாயகர் லாவ் வெங் சான், கோலா லங்காட் நகராண்மை கழகத் தலைவர் டத்தோ அமிருல் அஜிசான் அப்த் ரஹீம் மற்றும் PNSB யின் தலைமைச் செயல் அதிகாரி ராஜா அகமது ஷாரிர் இஸ்கந்தர் ராஜா சலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், வட தென் மத்திய இணைப்பு விரைவுச்சாலை (ELITE) மற்றும் தெற்கு கிள்ளான் விரைவுச்சாலையை (SKVE) இணைக்கும் மேம்பாலம் திறக்கப்படுவதால் பண்டார் சௌஜானா புத்ராவில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக போக்குவரத்து உச்ச நேரங்களில்ஆகும்.

“இந்த மேம்பாலம் கட்டப்படுவதால், இங்குள்ள  பகுதியைச் சுற்றியுள்ள 4,000 வீடுகள் எதிர்கொண்டு வரும் நீண்ட காலப் போக்குவரத்து சிக்கல்கள் குறித்த கவலையைத் தீர்க்கும்.

“ஆயிரக்கணக்கான குடியிருப்புப் பகுதிகளைக் கொண்ட ரிம்பாயுவில் நெரிசல் பிரச்சனை முக்கியமாக உள்ளது. பயனர்கள் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சிறிய சந்திப்பு வழியாக செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

“எனவே, இந்த மேம்பாலம் நெரிசலை விளக்க SKVE, ELITE, ரிம்பாயு மற்றும் பண்டார் சௌஜானா புத்ரா வரை வாழும் மக்களுக்குப் பெரும் உதவியாக  இருக்கும்,” என்று அவர் மேம்பாலத்தின் திறப்பு விழாவிற்குப் பிறகு சந்தித்தபோது கூறினார்.


Pengarang :