SELANGOR

போர்ட் கிள்ளானில் செம்பனை எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது

ஷா ஆலம், ஜூலை 7: போர்ட் கிள்ளானில் உள்ள ஜாலான் “டாங்கி“
அருகே செம்பனை எண்ணெய் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து
சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (லுவாஸ்) விசாரணை
அறிக்கையைத் திறந்ததுள்ளது.

செம்பணை எண்ணெயை சேமித்து வைக்கும் தொழிற்சாலை குழாயில்
கசிவு ஏற்பட்டதால் காலை 11 மணியளவில் இச்சம்பவம்
நிகழ்ந்துள்ளதாக லுவாஸ் தெரிவித்தது.

அவ்வாளகத்தை சோதனை செய்ததில் குழாய் கசிவு ஏற்பட்டிருந்தது
தெரிய வந்தது. இதனால் வளாகத்தின் வாய்க்கால் வழி எண்ணெய் கசிந்து
அருகிலுள்ள ஆற்றில் கலந்துள்ளது.

குறிப்பிட்ட இடத்தில் உள்ள நீர் செல்லும் வழியை மூடும் விரைவான
நடவடிக்கையை நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (ஜேபிஎஸ்)
மேற்கொண்டதால் அருகிலுள்ள சுங்கை அவுர் நதியில் எண்ணெய்
கசிவு ஏற்படவில்லை என லுவாஸ்யின் சோதனையின் அடிப்படையில்
தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து, ஆயில் பூம் பொருத்திய தீயணைப்புப்
படையினரின் உதவியுடன், சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ளவும்,
சம்பந்தப்பட்ட பகுதியில் கசிவை அகற்றவும், வளாகத்தின்
உரிமையாளருக்கு லுவாஸ் உத்தரவிட்டது.

லுவாஸ் நீரின் தர மாதிரியை சோதனை செய்தது மற்றும் நீர்
ஆதாரங்களை மாசுபடுத்திய குற்றத்திற்காகப் பிரிவு 79, லுவாஸ் சட்டம்
1999 இன் கீழ் விசாரணை ஆவணங்களைத் திறந்தது.

இதுபோன்ற பிரச்சனைகளுக்கு மாநில அரசு, லுவாஸ் மற்றும்
தொடர்புடைய நிறுவனங்கள் சமரசம் செய்யாது, மாறாகப் பிரச்சனைகளை
ஏற்படுத்தும் மற்றும் நீர் ஆதாரங்களை மாசுபடுத்தும் எந்தவொரு
தரப்பினரின் அலட்சியத்திற்கும் எதிராக கடுமையான நடவடிக்கை
எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.


Pengarang :