NATIONAL

ஹிஜ்ரா கொண்டாட்டத்தை முன்னிட்டு முஸ்லிம்கள் சிறப்பான நிலைக்கு மாற்றம் காணுமாறு மந்திரி புசார் அழைப்பு விடுத்தார்

ஷா ஆலம், ஜூலை 7: இன்று கொண்டாடப்படும் ஹிஜ்ரா கொண்டாட்டத்தை முன்னிட்டு முஸ்லிம்களை சிறப்பான நிலைக்கு மாற்றம் காணுமாறு டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அழைப்பு விடுத்துள்ளார்.

மால் ஹிஜ்ரா 1446 கொண்டாட்டத்தை முன்னிட்டு சமூக ஊடகங்களில் தனது பதிவில், நபிகள் நாயகத்தின் ஹிஜ்ரா கதை ஒரு வரலாற்று நிகழ்வு மற்றும் முஸ்லிம்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று அமிருடின் கூறினார்.

“மக்காவில் தனது குடும்பத்தையும் பிறந்த இடத்தையும் விட்டுவிட்டு மடினாவுக்குப் புலம்பெயர்ந்து பயணத்தைத் தொடர்ந்த முஹம்மட் நபியின் தியாகம் ஆயிரம் அர்த்தங்களைக் கொண்ட ஒரு சிறந்த பாடமாகும்.

“இந்த ஹிஜ்ரா நிகழ்வு நமது நல்ல மாற்றத்திற்கு ஓர் ஊக்குவிப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்,” என்று அவர் நேற்றிரவு முகநூல் மூலம் கூறினார்.

அவல் முஹர்ரம் அல்லது மால் ஹிஜ்ரா என்பது இஸ்லாமிய வரலாற்று நிகழ்வாகும், இது கி.பி 622 இல் மக்கா நகரிலிருந்து மடினாவிற்கு நபிகள் நாயகம் இடம்பெயர்ந்ததை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு மால் ஹிஜ்ரா கொண்டாட்டத்தின் கருப்பொருள் ‘அல்-பலாஹ் பெமாசு மடாணி மலேசியா’ அதாவது செழிப்பு மற்றும் வெற்றி என்று பொருள் ஆகும்.


Pengarang :