ANTARABANGSA

காஸாவில் சுகாதார வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் தற்போது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன

காஸா, ஜூலை 7: காஸாவில் சுகாதார வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் தற்போது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு (UNRWA) தெரிவித்துள்ளது.

“சுகாதார வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள், கழுவ, சுத்தம் செய்ய மற்றும் குடிக்க போன்ற நடவடிக்கைகளுக்குக் கடல் நீரை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

“காஸாவில் உள்ள குழந்தைகள் ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் தண்ணீர் மற்றும் உணவைச் சேகரிக்கிறார்கள், பெரும்பாலும் அதிக சுமைகளைச் சுமந்துகொண்டு நீண்ட தூரம் நடந்து செல்கிறார்கள்” என்று X மேடையில் UNRWA தெரிவித்துள்ளது.

ரஃபா மீதான தாக்குதலை நிறுத்துமாறு டெல் அவிவ்க்கு (Tel Aviv) உத்தரவிட்ட சர்வதேச நீதிமன்றத்தை (ICJ) மீறி காஸா மீதான படுகொலைத் தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்கிறது.

இஸ்ரேல் அக்டோபர் 7 முதல் காஸாவில் பேரழிவுகரமான போரை நடத்தி வருகிறது, இதில் குறைந்தது 38,098 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 87,705க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், 10,000க்கும் மேற்பட்ட மக்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் காசா முழுவதும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி இறந்திருக்கக்கூடும் நம்பப்படுகிறது.


Pengarang :