SELANGOR

ஐந்து ஊராட்சி மன்றங்கள் நிலச்சரிவு அபாய மிக்க சாலையின்  இரு மருங்கிலும் சரிவு தொடர்பான புகாரை சமர்ப்பித்துள்ளன

ஷா ஆலம், ஜூலை 10: அடையாளம் காணப்பட்ட பல ஆபத்தான சாலைகளின்  இருமருங்கிலும்  ஏற்படும் மண்ணரிப்பு , நீர் அரிப்பு மற்றும் மண் உள்வாங்குவது போன்ற நில பலவீணங்கள் தொடர்பான புகாரை மேல் நடவடிக்கைக்காக ஊராட்சி மன்றங்கள் (பிபிடி) சமர்பித்துள்ளதாக உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

சுபாங் ஜெயா மாநகராட்சி, காஜாங், செலாயாங், அம்பாங் ஜெயா மற்றும் உலு சிலாங்கூர் நகராண்மை கழகங்கள் இந்த புகார் அறிக்கைகளை சமர்ப்பித்ததாக இஷாம் ஹாஷிம் விளக்கினார்.

“மிக சமீபத்தில், பல நில சரிவுகள் ஏற்பட்டதன் காரணமாகச் சுபாங் ஜெயாவும் சேர்க்கப்பட்டுள்ளது” என்று நேற்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற அமர்வில் அவர் கூறினார்.

முன்னதாக, உலு லங்காட், உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் சுபாங் ஜெயாவைச் சுற்றியுள்ள சாலைகளில் நில சரிவுகள் அபாயத்தில் உள்ள இடங்களை அவரது தரப்பு கண்டறிந்ததாக இஷாம் கூறினார்.

பல புகார்கள் வந்ததைத் தொடர்ந்து அவர் தலைமையிலான  குழுவின் கண்காணிப்பின் விளைவாக இந்த புகார் அறிக்கைகள் பெறப்பட்டன என்று அவர் விளக்கினார்.

பிபிடி மற்றும் நிலம் மற்றும் மாவட்ட அலுவலகத்தின் பங்கேற்புடன் கூடுதலாக இந்த கண்காணிப்பு நடவடிக்கையில் அனுபவம் மற்றும் நிபுணத்துவம் கொண்ட பொதுப்பணித் துறை மற்றும் கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் துறை ஆகியவற்றால் இந்த குழு உருவாக்கப் பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.


Pengarang :