SELANGOR

புக்கிட் பாஜா பழங்குடியின கிராமத்திற்கு 180 ஏக்கர் மாற்று நிலம் 

ஷா ஆலம், ஜூலை 10: டெங்கிலில் உள்ள புக்கிட் பாஜா பழங்குடியின கிராமம், மாநில அரசுக்குச் சொந்தமான 180 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட புதிய பகுதிக்கு மாற்றப்படும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

அப்பகுதியில் 243 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட  அவர்களின்   முன்னாள் கிராமம்  அங்கீகரிக்கப்படாத நிலத்தில் இருந்ததாலும், அவை சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்திற்கு சொந்தமான (பிகேஎன்எஸ்)  இடம் என்பதால், பதிய மாற்று இடம்  அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

 அந்த பழைய இடம் தெற்கு சிலாங்கூர் ஒருங்கிணைந்த வளர்ச்சி பகுதி (ஐடிஆர்ஐஎஸ்எஸ்) திட்டத்திற்கு மேம்படுத்தப்படும்.

“அரசாங்கத்தைப் பொறுத்தவரை, நாங்கள் பல விவாதங்களை மேற்கொள்கிறோம். எனவே, இது ஒரு வெற்றிகரமான சூழ்நிலையாகும். அதாவது பழங்குடியினருக்கு சொந்த இடம் வழங்கப்படும், அதே நேரத்தில் பழைய தளத்தை உருவாக்க பிகேஎன்எஸ்க்கு அனுமதி வழங்கப்படும்.

“எனவே, முதற்கட்டமாக அரசுக்கு சொந்தமான 180 ஏக்கர் நிலத்தை புக்கிட் பாஜா பழங்குடியினரின் கிராமமாக அரசிதழில் வெளியிட வேண்டும். அந்த இடம் அவர்களுக்கு உரிமையானதாக மாறும்,” என அவர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் கூறினார்.

கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி, கல்லறைத் தளங்கள், சூராவ், பாலாய் ராயா, மழலையர் பள்ளிகள், கடைகள் மற்றும் உள்கட்டமைப்பு செலவுகள் உள்ளிட்ட பிற விஷயங்கள் கட்டங்கட்டமாக நிறைவேற்றப்படும் என்று அமிருடின் மேலும் கூறினார்.

டெங்கிலின் சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜமில் சாலேவின் கேள்விக்கு பதிலளித்த அவர், வீடு வழங்கவும்,  தற்காலிக இடமாற்ற செலவுகளை ஈடுகட்டவும் அரசு முன்வந்தது என்று விளக்கினார்.

“இது விரைவில் இறுதி செய்யப்படும், பிகேஎன்எஸ் ஆல் அது ஏற்பாடாகும் . மேலும் குறிப்பிட்ட பகுதி சிறந்த வளர்ச்சியை எட்டும் சாத்தியம் உள்ளது,” என்று அவர் கூறினார்.


Pengarang :