NATIONAL

செராண்டாவைப் போக்குவரத்து,வாகன உற்பத்தி மையமாக மாற்ற மாநில அரசு உத்தேசம்

ஷா ஆலம், ஜூலை 10: செராண்டா அடைந்துள்ள வளர்ச்சியை தொடர்ந்து அவ்விடத்தை பொருள் பட்டுவாடா  போக்குவரத்து வாகன உற்பத்தி மையமாக மாற்ற மாநில அரசு உத்தேசித்துள்ளது.

“UMW டெவலப்மென்ட் Sdn Bhd“ நிறுவனம் செராண்டாவில் உயர் மதிப்பு தொழில்துறை,  நகரத்தைத் திறந்ததன் மூலம் அவ்விடம் பல்வேறு முதலீடுகளை ஈர்த்து வருகிறது என்றும் முதலீட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.

“பெரோடுவா, டான் சோங் மோட்டார்ஸ் மற்றும் யுஎம்டபிள்யூ டெவலப்மென்ட் போன்ற தானியங்கி வாகன விற்பனை தொழிற்சாலைகள் திறக்கப்பட்டது செராண்டாவில் முதலீட்டு நடவடிக்கைகளை அதிகரித்தது.

“UMW தலைமையகத்தை ஷா ஆலமிலிருந்து செராண்டாவுக்கு மாற்றியதன் மூலம் மலேசியா முதலீட்டை இந்தப் பகுதிக்கு ஈர்த்துள்ளது” என்று மாநில சட்டமன்ற அமர்வில் இங் ஸீ ஹான் கூறினார்.

கிழக்கு கடற்கரை ரயில் பாதையின் (ECRL) வளர்ச்சியானது நாட்டின்  பொருள் பட்டுவாடா தளவாட மையமாகச் செரெண்டாவை உருவாக்குவதற்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது என்றும் அவர் கூறினார்.

“கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு கடற்கரையிலிருந்து தண்டவாளங்கள் சந்திக்கும் இடமாகப் பண்டார் செரெண்டா நிலையம் இருக்கும். செரெண்டா ஒரு விநியோக மற்றும் தளவாட மையமாக மாறும் சாத்தியமும் உள்ளது.

“முதலீட்டாளர்கள் குவாந்தான் துறைமுகத்தைப் பயன்படுத்தி கிழக்குப் பகுதிக்குப் பொருட்களை விநியோகிக்க கிழக்கு கடற்கரை ரயில் பாதையைப் பயன்படுத்தலாம். அதே நேரத்தில் கிழக்கிலிருந்து பொருட்களை போர்ட் கிள்ளான் மற்றும் பினாங்கிற்குப் பண்டார் செராண்டா நிலையம் வழியாக அனுப்ப முடியும்.

“இந்த நிலையம் பயணிகள் நிலையமாகவும் செயல்படும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :