NATIONAL

கேரி தீவில் மூன்றாவது துறைமுகத்தின் மேம்பாடு 100,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கும்

ஷா ஆலம், ஜூலை 10: முதல் சிலாங்கூர் திட்டத்தின் (RS-1) மூலம் கேரி தீவில் மூன்றாவது துறைமுகத்தின் மேம்பாடு, ஓராங் அஸ்லி சமூகம் உட்பட உள்ளூர்வாசிகளுக்கு 100,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம், அத்தீவில் உள்ள ஓராங் அஸ்லி சமூகமும் ஒரு சிறந்த தகவல் தொடர்பு நெட்வொர்க் அமைப்பு, உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகளை அனுபவிக்கும் என்று ஓராங் அஸ்லி சமூக நலன் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு தெரிவித்தார்

“மேலும், இந்த திட்டம் சுற்றுலா நடவடிக்கைகள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை தூண்டும்,” என அவர் மாநில சட்டசபை கூட்டத்தொடரில் கூறினார்.

இது நிலம், கல்வி, உள்கட்டமைப்பு, பொருளாதாரம், தலைமைத்துவம், கலாச்சாரம் மற்றும் சுகாதாரம் ஆகிய ஏழு முக்கிய அம்சங்கள் அடிப்படையில் ஓராங் அஸ்லி சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மாநில அரசின் தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளது என பாப்பாராய்டு கூறினார்.

“ஓராங் அஸ்லி விவகாரங்களின் நிலைக்குழு எப்போதுமே சிலாங்கூர் ஓராங் அஸ்லி மேம்பாட்டுத் துறையுடன் (ஜாகோவா) இணந்து அவர்களுக்கு உதவுவதற்காக இந்த ஏழு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் திட்டங்களைச் செயல்படுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, கேரி தீவு துறைமுகத்தின் மேம்பாடு, மலேசியா தொடர்ந்து பிராந்தியத்தில் சிறந்த மற்றும் பிரீமியம் துறைமுக சேவை வழங்குனராக இருப்பதை உறுதி செய்யும் என டத்தோ மந்திரி புசார் கூறினார்.

மேலும், நாட்டிற்கு அதன் சொந்த நெட்வொர்க் தேவை என்றும், வடக்கு மற்றும் மேற்கு துறைமுகங்களை மட்டும் நம்ப முடியாது, ஏனெனில் அவை எதிர்காலத்திற்கு போதுமானதாக இல்லை என்றும் அவர் கூறினார்.


Pengarang :