SELANGOR

RM455,054 செலவில் 131 ஊழல் எதிர்ப்பு திட்டங்கள் – மாநில அரசு

ஷா ஆலம், ஜூலை 11: மாநில அரசு 2022 ஆம் ஆண்டு வரை அரசு ஊழியர்கள் மற்றும் இளைஞர்களுக்கு 131 ஊழல் எதிர்ப்பு திட்டங்களை ஏற்பாடு செய்ய மொத்தம் RM455,054 செலவிட்டுள்ளது.

அரசு செயலர் அலுவலகம் (SUK), மாவட்ட மற்றும் நில அலுவலகம், ஊராட்சி மன்றங்கள் (பிபிடி), சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் மாநில அரசு நிறுவனங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது என இளைஞர் சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

“ஊழல் குற்றத்திற்கு எதிராக தடுப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை எடுக்க சிலாங்கூர் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்துடன் (MACC) மாநில அரசு நேரடி உறவை ஏற்படுத்தியது.

“இந்த ஒத்துழைப்பின் மூலம், பல்வேறு கருத்தரங்குகள், பட்டறைகள், விளக்கங்கள் மற்றும் ஊழல் தொடர்பான துண்டு பிரசுரங்கள் விநியோகம் ஆகியவை செயல்படுத்தப்பட்டன.

“மேலும், கவுன்சிலர்கள், சிலாங்கூர் மேம்பாட்டு மற்றும் பாதுகாப்புக் குழுவின் தலைவர் (JPKK), சிலாங்கூர் இளைஞர் நிறுவகத்தினர் போன்ற சமூகத் தலைவர்களை உள்ளடக்கிய ஊழல் இல்லாத உறுதிமொழியில் (IBR) மாநில அரசு வெற்றி பெற்றது” என்று அவர் கூறினார்.

சிலாங்கூர் மாநில சட்டசபையில் முதல் சிலாங்கூர் திட்டத்தின் (ஆர்எஸ்-1) மத்தியக்கால ஆய்வுக்கான (கேஎஸ்பி) முன்மொழிவை வெளியிடும் போது அவர் இவ்வாறு கூறினார்.

இதற்கிடையில், ஊழலைத் தடுப்பதில் நிறுவன ஒருமைப்பாடு திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய மாநில அரசு எப்போதும் முயற்சிக்கிறது என்று நஜ்வான் தெரிவித்தார்.

“அரசு ஊழியர்களை உள்ளடக்கிய ஒரு நேர்மையான புகார் தளத்தை மின்னஞ்சல், தொலைபேசி இணைப்பு, தொலைநகல், கடிதம் ‘வாக்-இன்’ மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவை புகார்களை எளிதாக்குவதற்கு நிறுவப்பட்டுள்ளன,” என்று அவர் விளக்கினார்.


Pengarang :