NATIONAL

மாநிலத்தின் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 7.43 சதவீதம் – ஆர்எஸ்-1 இலக்கை தாண்டியது

ஷா ஆலம், ஜூலை 12: மாநிலம் 2021 முதல் 2023 வரை அடைந்த சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 7.43 சதவீதம் என்பது முதல் சிலாங்கூர் திட்டத்தின் (ஆர்எஸ்-1) இலக்கை விட அதிகமாக உள்ளது.

ஜூலை 2022 இல் வழங்கப்பட்ட விரிவான மாநிலக் கொள்கைகள் மற்றும் வளர்ச்சியை உள்ளடக்கிய ஐந்தாண்டுத் திட்டம், பொருளாதார வளர்ச்சியை 6.5 முதல் 7.0 சதவீதமாக அதிகரிக்க பரிந்துரைக்கிறது.

ஆனால் நடப்பில் ஆர்.எஸ் 1 ரின் இலக்கை மிஞ்சிய  விகிதத்தை சிலாங்கூர்  பொருளாதார வளர்ச்சி பதிவிட்டுள்ளது, இது ஊக்குவிக்கும் சிலாங்கூரின் திறனைப் பிரதிபலிக்கிறது என டத்தோ மந்திரி புசார். கூறினார்.

ஒவ்வொரு அடியும் நேர்மறையான மற்றும் நிலையான வளர்ச்சிக்கு ஏற்ப எடுத்து வைக்கப்படுவதை உறுதிசெய்யவும், மாநிலத்தின் பொருளாதார மூலோபாய இலக்குகளை அடைய ஆதரவளிப்பதில் இது முக்கியமானது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“மத்தியக் கால ஆய்வு செயல்முறையின் ஒரு பகுதியாக, தற்போதைய சூழலுக்கு ஏற்ப, கூட்டமைப்புக்கும் மாநிலத்திற்கும் இடையே உள்ள திசையை கருத்தில் கொண்டு, சில முக்கிய இலக்குகள்  மறுமதிப்பீடு செய்யப் படுகிறது.

“எல்லா  மாநிலங்களையும் மேம்படுத்துவதற்கான கூட்டரசு கடப்பாட்டுடன்,  மாநில நிர்வாகம் RS-1 இல் பொருளாதாரத்தை உயர்த்துவதுவும் சேர்த்து, மொத்த தேசிய உள்நாட்டு உற்பத்தி இலக்கை 27 சதவீதமாக நிர்ணயித்துள்ளது,” என்று அவர் கூறினார்.

ஜூலை 2 அன்று மலேசிய புள்ளியியல் துறையின் (DOSM) அறிக்கை, கடந்த ஆண்டு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25.9 சதவீத பங்களிப்பு மூலம்,  மீண்டும்  சிலாங்கூர் அதிக பங்களிப்பை வழங்கியுள்ளதை  காட்டுகிறது.

2022 உடன் ஒப்பிடுகையில் 0.4 சதவீதம் அதிகரிப்புடன் சிலாங்கூரின் பொருளாதார மதிப்பும் முதல் முறையாக RM406.1 பில்லியனை எட்டியது, இதன்மூலம் RM400 பில்லியனைத் தாண்டிய மலேசியாவின் முதல் மாநிலமாக மாறியது.

கடந்த ஆண்டு நாட்டின் சராசரி வளர்ச்சியான  3.6 சதவீதம் என்ற விகிதத்துடன் ஒப்பிடுகையில் சிலாங்கூர்  5.4 சதவீத மதிப்புடன் மிக உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை  பதிவு செய்துள்ளது.

இதற்கிடையில், பல முக்கிய துறைகள் மற்றும் சிக்கலான தொழில் துறை மேம்பாடுகளின் வழி சராசரியாக RM39.4 பில்லியன் முதலீட்டை ஈர்த்து சாதனை படைத்துள்ளது மாநில நிர்வாகம் என்றும் அமிருடின் மேலும் கூறினார்.

“இந்த வெற்றியானது நிலையான மற்றும் பயனுள்ள பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில், பிராந்தியத்தில் ஒரு முக்கிய முதலீட்டு மையமாக அதன் நிலையை வலுப்படுத்துவதிலும் மாநிலத்தின் அர்ப்பணிப்பை காட்டுகிறது” என்று அவர் கூறினார்.


Pengarang :