ஷா ஆலம், ஜூன் 12: அதிக முதலீட்டாளர்களை ஈர்க்கவும், பொருளாதாரத் துறையின்  ஆற்றல் மேம்பாட்டுக்கு பங்களிக்கவும், நாட்டின் பிரதான நுழைவாயிலாக விளங்கும்  சிலாங்கூர் பொது போக்குவரத்துக்கான கட்டமைப்புகள்   நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

போர்ட் கிள்ளான், கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் (KLIA) மற்றும் சுபாங்கில் உள்ள சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையம் போன்ற  நாட்டின் முக்கிய மூன்று நுழை வாயில்கள் கொண்டிருப்பதுடன், கூட்டரசுடன்  அணுக்கமான ஒத்துழைப்பு  பேணுவது  உட்பட  விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று போர்ட் கிள்ளான் மாநில சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

“இந்த மூன்று முக்கிய கட்டமைப்புகளும் மத்திய அரசுக்குச் சொந்தமானவை என்பதால், பிரதான நுழைவாயிலைச் சுற்றியுள்ள சாலைகள் வசதியாகவும், பாதுகாப்பாகவும், நல்ல தரமாகவும், எப்போதும் நல்ல நிலையில் இருப்பதை உறுதிசெய்ய மாநில அரசுடன் இணைந்து செயல்படுவது முக்கியம்.

“பயனர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக தெளிவான போக்குவரத்து அடையாள அமைப்புடன் கூடுதலாக விளக்குகளுடன் செயல்படுவதை உறுதி செய்வது உட்பட, சாலைப் பயனாளர்களின் புகார்களுக்கு காத்திருக்காமல் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று அஸ்மிசம் ஜமான் ஹுரி கூறினார்.

சிலாங்கூர் மாநில சட்டசபையில் முதல் சிலாங்கூர் திட்டத்தின் (ஆர்எஸ்-1) மத்தியக்கால மதிப்பாய்வை (கேஎஸ்பி) சமர்ப்பித்து விவாதித்த போது அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அழகான சூழலை உருவாக்குவதில் பாதையின் தூய்மையும் புத்துணர்ச்சி பங்கு வகிக்கிறது என அஸ்மிசாம் கூறினார்.

“சிலாங்கூர் ஒரு வளர்ந்த மாநிலம் என்ற பிம்பத்தை உயர்த்துவதற்கும் இந்த மூன்று கட்டமைப்புகளின்  பாதைகள்  கவர்ச்சிகரமான மற்றும் நிலையான நிலப்பரப்பை உருவாக்குவதை உறுதி செய்ய மாநில மற்றும் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்று  அவர்  முன் மொழிவதாக  அவர் கூறினார்.