NATIONAL

செலாட் கிள்ளான் உறுப்பினர் தொகுதியைக் காலி செய்ய வேண்டியதில்லை- சபாநாயகர் முடிவு

ஷா ஆலம், ஜூலை 12- செலாட் கிள்ளான் சட்டமன்றத் தொகுதியைக் காலி செய்ய வேண்டியதில்லை என்று மாநில சட்டமன்ற சபாநாயகர் முடிவு செய்துள்ளார்.

டத்தோ அப்துல் ரஷிட் அசாரியின் அடிப்படை உறுப்பினர் அந்தஸ்தை பார்ட்டி பிரிபூமி பெர்சத்து (பெர்சத்து) கட்சி நீக்கியது, சிலாங்கூர் மாநில அரசியலமைப்பின் 65ஏ(2)(சி) பிரிவின் கீழ் திட்டமிடப்பட்ட நீக்கம் எனக் கண்டறியப் பட்டதாக லாவ் வேங் சான் கூறினார்.

உலு கிளாங் தொகுதி உறுப்பினர் சமர்பித்த அறிவிப்பு மற்றும் சான்றுகள் நிரூபணம் செய்வதற்கான பொறுப்பின் சுமையை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை என்று அவர் சொன்னார்.

சமநிலை தொடர்பான விதியில் ஒரு மேற்கோள் உள்ளது. ‘சமநிலையை எதிர்பார்ப்பவர்கள் சுத்தமான கரங்களுடன் வந்து சமநிலை செய்ய வேண்டும்‘ என்பது அந்த விதியாகும். அந்த தொகுதி எதிர்பாராத வகையில் காலியானதாக அறிவிப்பதற்கு போதுமான சான்றுகள் இல்லை என சாத்திய மதிப்பீட்டு அளவுகோலின் அப்படையில் முடிவெடுப்பது பாதுகாப்பானது என்று அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் செலாட் கிள்ளான் தொகுதி காலியாகவில்லை என நான் அறிவிக்கிறேன் என்று அவர் மேலும் சொன்னார்.

செலாட் கிள்ளான் உறுப்பினரான அப்துல் ரஷிட் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு தனது ஆதரவைப் புலப் படுத்தியதைத் தொடர்ந்து அவர் உறுப்பினராக இருக்கும் தொகுதி காலியானதாக அறிவிக்கக் கோரி சிலாங்கூர் மாநில பெர்சத்து தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி சபாநாயகருக்கு அறிக்கை அனுப்பியிருந்தார்.

கட்சி மீதான விசுவாசத்தை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கக் கோரி அனுப்பப்பட்ட கடிதத்திற்குப் பதிலளிக்கத் தவறியதைத் தொடர்ந்து அப்துல் ரஷிட்டின் உறுப்பியத்தை பெர்சத்து கட்சி ரத்து செய்தது.


Pengarang :