SELANGOR

குழந்தைகள் புத்தகக் கண்காட்சிக்கு 100,000க்கும் மேற்பட்டோர் வருகை புரிய இலக்கு

ஷா ஆலம், ஜூலை 15: ஜூலை 24 முதல் 28 வரை சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (பிபிஏஎஸ்) நடத்தவுள்ள குழந்தைகள் புத்தகக் கண்காட்சியில் 100,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாகத்தில் ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இக் கண்காட்சிக்கு தங்கள் பிள்ளைகளை அழைத்து வருமாறு பிபிஏஎஸ் இயக்குநர் டத்தின் பாடுகா மஸ்துரா முஹமட் பெற்றோர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

“மேலும், இக்கண்காட்சியில் ஓவியம் வரையும் பட்டறைகள், அனுபவம் வாய்ந்த பயிற்றுவிப்பாளர்கள் நடத்தும் “கோமிக்ஸ்“பட்டறைகள், இல்லஸ்ட்ரேட்டர்கள் மற்றும் புத்தக எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல் அமர்வுகள் உட்பட பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் இடம்பெறும்.

இப்புத்தகக் கண்காட்சியின் போது, தினமும் 20 வருகையாளர்களுக்கு அதிர்ஷ்டக் குலுக்கு நிகழ்ச்சி நடத்தப்படும் என்று மஸ்துரா கூறினார்.

RM30க்கும் மேல் புத்தகங்கள் வாங்கினால் மட்டுமே RM500 ரொக்கம் பெற வாய்ப்புள்ள அதிர்ஷ்ட குலுக்கில் பங்கேற்க முடியும் என்று அவர் விளக்கினார்.

“சிலாங்கூர் மற்றும் மாநிலத்திற்கு வெளியே உள்ள மக்களை இந்தக் குழந்தைகள் புத்தகக் கண்காட்சிக்கு வருமாறு நான் அழைக்கிறேன். ஏனென்றால் அவர்கள் தங்களுக்குப் பிடித்த ஓவியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் நகைச்சுவை எழுத்தாளர்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.


Pengarang :