கிள்ளான், ஜூலை 15: 2017 முதல் கடந்த ஆண்டு வரை ஃபாமா ஏற்பாடு செய்த ஃபாமா விற்பனை சந்தை  மூலம் மொத்தம் RM24.2 மில்லியன் மதிப்புள்ள விற்பனையை பதிவு செய்துள்ளது.

மேலும், 2,180 தொழில்முனைவோருக்கு பயனளிக்கும் வகையில், இந்த திட்டம் சந்தையின் அளவை விரிவு படுத்துவதிலும், உணவு உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதிலும் வெற்றி பெற்றதாக வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

இந்த ஆண்டு பேராக், சரவாக், நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பகாங், கிளந்தான், கோலாலம்பூர் மற்றும் சபா ஆகிய இடங்களில் 755 தொழில்முனைவோரை உள்ளடக்கிய RM7.85 மில்லியன் விற்பனை இலக்குடன் ஃபாமா விற்பனை சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ முகமட் சாபு கூறினார்.

“200 தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் RM750,000 விற்பனை திறனை இலக்காகக் கொண்டு இந்த ஆண்டு சிலாங்கூர் நான்காவது இடமாக இந்த நிகழ்வை நடத்தியது.

“சிலாங்கூரில் ஃபாமா விற்பனை சந்தை  2024 நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதன் மூலம், நுகர்வோர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் பொருட்களை நியாயமான விலையில் பெற்று, உள்ளூர் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்துவார்கள் என்று நம்பப்படுகிறது” என்று அவர் ஃபாமா விற்பனை சந்தை  2024@Selangor இல் கூறினார்.

ஃபாமா பிஸ்ட் 2024 என்னும் ஃபாமா விற்பனை சந்தை சிலாங்கூர் உள்ளூர் தொழில் முனைவோர் தங்கள் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளைத் திறக்கிறது என்று முகமட் கூறினார்.

“இது யுனைடெட் கிங்டம், ஹாங்காங் மற்றும் கம்போடியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் முகவர்களை உள்ளடக்கியது. இந்த அமர்வுக்கான சாத்தியமான விற்பனை RM3 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

ஃபாமா ஃபிஸ்ட் என்பது “MYGAP“ ஐ மேம்படுத்துவதற்கான ஒரு தளமாகும், இது மலேசிய நல்ல விவசாய நடைமுறை கொண்டுள்ளது என்பதற்கான சான்றிதழ் ஆகும். இது பாதுகாப்பான, தரமான விவசாய உணவுப் பொருட்களின் உற்பத்திக்கான நிலையான விவசாய நடைமுறைகளை வலியுறுத்துகிறது மற்றும் நுகர்வோருக்கு உறுதியளிக்கிறது.