NATIONAL

ஆற்று நீரில் பிளாஸ்டிக் நுண்பொருள் மாசுபாடு  குறித்து அரசாங்கம் ஆராய்கிறது

புத்ராஜெயா, ஜூலை 15 – மலேசியாவின் தேசிய நீர் ஆராய்ச்சி நிறுவனம் (நஹ்ரிம்)  மலேசியாவில் உள்ள பல ஆறுகளில் புதிய மாசுபாடுகளின் தாக்கம் குறித்து 12வது மலேசியா திட்டத்தின் கீழ் அரசாங்கம் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் கூறினார்.

அந்த மாசு பாடுகளில் எண்டோகிரைன் சீர்குலைக்கும் இரசாயனங்கள் (EDCs), நுண்ணுயிர் எதிர்ப்பு (AMR) மற்றும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் ஆகியவை அடங்கும் என எரிசக்தி மற்றும் நீர் மாற்ற அமைச்சராகவும் இருக்கும் அவர் கூறினார்.

“சர்வதேச கவனத்தை ஈர்க்கும் புதிய மாசுபாடுகளில் ஒன்று மலேசியாவின் நீர் ஆதாரங்களில் ஏற்படும் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு ஆகும்.

5 மில்லிமீட்டர் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் துண்டுகள் என உலக சுகாதார நிறுவனத்தால் வரையறுத்துள்ள மைக்ரோபிளாஸ்டிக்ஸ், பல்வேறு வழிகளில் ஆற்றில் நுழைகிறது,” என்று அவர் கூறினார். .

ஃபிரான்டியர் லேபரட்டரி லிமிடெட், ஜப்பான் மற்றும் மலேசியன் வாட்டர் அசோசியேஷன் ஆகியவற்றுடன் இணைந்து நஹ்ரிம் ஏற்பாடு செய்த மைக்ரோபிளாஸ்டிக்ஸ் தொடர்பான 1வது தேசிய கருத்தரங்கில் அவர் தனது உரையில் இவ்வாறு கூறினார்.

– பெர்னாமா


Pengarang :