NATIONAL

நூர் ஃபாரா கார்தினி குடும்பத்திற்கு உதவ “உப்சி“ முன்வந்தது

ஈப்போ, ஜூலை 17: சுல்தான் இட்ரிஸ் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தின் (உப்ஸி) முன்னாள் மாணவி நூர் ஃபாரா கார்தினி அப்துல்லா (25) கொலையைத் தொடர்ந்து தஞ்சோங் மாலிமில் தங்கியிருக்கும் காலம் முழுவதும் அவரது குடும்பத்திற்கு உதவ அப் பல்கலைகழகம் முன் வந்துள்ளது.

இந்த இக்கட்டான நேரத்தில் இறந்த தங்கள் மகள் தொடர்பான விஷயங்களைக் கையாளும் போது அக்குடும்பத்தின் சுமையை குறைக்கவே இந்த உதவி வழங்கப்படுகிறது என்று அதன் துணைவேந்தர் பேராசிரியர் டத்தோ முகமட் அமின் முகமட் டாஃப் கூறினார்.

“மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பிற தொடர்புடைய இடங்களுக்கு அவர்கள் செல்வதற்கு வசதியாக அவர்களுக்கு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும்.

“இறந்தவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் கல்லறைக்கு செல்ல ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு “UPSI“ பேருந்து சேவையை வழங்குகிறது,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

சரவாக்கின் மிரியைச் சேர்ந்த ஃபராவின் உடல் ஜூலை 15 மாலை 6 மணியளவில் உலு சிலாங்கூரில் உள்ள கம்போங் ஸ்ரீ கிளேடாங்கில் உள்ள செம்பனை தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஜூலை 10 ஆம் தேதி வாடிக்கையாளருக்கு வாடகைக் காரை வழங்கிய பிறகு அவர் காணவில்லை என்று புகார் செய்யப்பட்டது.

– பெர்னாமா


Pengarang :