NATIONAL

தண்டூரி சிக்கன் உட்கொண்ட 28 மாணவர்கள் திடீர் சுகவீனம்- சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

ஜோர்ஜ் டவுன், ஜூலை 18 – நச்சுவுணவு பாதிப்பு காரணமாக பினாங்கு,
ஜாலான் இப்பெட்சனில் அமைந்துள்ள துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா
தொழில்நுட்ப இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த 28 மாணவர்கள்
சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அம்மாணவர்கள் அனைவரும் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல்
பள்ளியின் தங்கும் விடுதியில் உள்ள சிற்றுண்டிச் சாலையில்
வழங்கப்பட்ட தண்டூரி பொறித்த கோழியை உண்டப் பின்னர் உடல்
உபாதைக்கு ஆளாளதாகக் கூறப்படுகிறது.

பினாங்கு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்ட அம்மாணவர்கள் அனைவரும் சிகிச்சைக்குப் பின்னர்
வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதாக இளைஞர், விளையாட்டு மற்றும்
சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூய் ஸி
கூறினார்.

அந்த பள்ளியிலுள்ள 496 மாணவர்கள் மற்றும் இரு வார்டன்களுக்கு அந்த
உணவு பரிமாறப்பட்டது. எனினும், அவர்களில் 28 பேர் மட்டுமே
கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். அம்மாணவர்கள் அனைவரும் வீடு
திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு மேல் சிகிச்சைத்
தேவைப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை அந்த பள்ளியின் சிற்றுண்டிச்
சாலையில் மதிய உணவை உட்கொண்ட 496 மாணவர்களும் இரு
வார்டன்களும் நச்சுணவு பாதிப்புக்கு உள்ளானதாகவும் அவர்களில் 30 பேர்
சிகிச்சைக்காகப் பினாங்கு மருத்துவமனை மற்றும் பெனாகா சுகாதார
கிளினிக்குக்குக் கொணடுச் செல்லப்பட்டதாகவும் ஊடகங்கள் செய்தி
வெளியிட்டிருந்தன.

இதனிடையே, உணவு விநியோகம் சார்ந்த துறைகளில் இருப்போர் மிகுந்த
கவனத்துடன் செயல்படும் அதே வேளையில் உணவுத் தயாரிப்பில்
சுத்தத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும்படி டேனியல் கேட்டுக் கொண்டார்.


Pengarang :