NATIONAL

ஊழல் குற்றச்சாட்டுகளைத் தீயணைப்புத் துறை கடுமையாகக் கருதுகிறது

கோலாலம்பூர், ஜூலை 18 – மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட பதவி உயர்வு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளை அத்துறை மிகக் கடுமையாகக் கருதுகிறது.

இவ்விவகாரம் சமூக ஊடகங்களில் பரவிய நிலையில் அக்குற்றச்சாட்டுகள்  குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று அதன் தலைமை  இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முகமது தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை நாங்கள் கடுமையாகக் கருதுகிறோம் என்று பெர்னாமாவுக்கு  வழங்கிய  சுருக்கமான பதிலில் அவர் கூறினார்.

மீட்புக் குழுவின் அதிகாரிகள் பதவி உயர்வுக்காக கோரிக்கை வைப்பது மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைச் சித்தரிப்பதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு புகைப்படங்கள் முன்னதாக டெலிகிராம் செயலியில் வெளிவந்தன.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல் நடவடிக்கைக்காகப் போலீஸ் புகாரைத்  தாக்கல் செய்வார்கள் என்று ஹிஷாம் தெரிவித்தார்.

ஏதேனும் விஷயங்களில்  அதிருப்தி கொண்டிருக்கும் பணியாளர்கள் அது குறித்து கூட்டங்கள், இணையம் மற்றும்  எழுத்துப்பூர்வமாகப் புகார்களைச் சமர்ப்பிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அநாமதேய கடிதங்கள் உட்பட ஒவ்வொரு புகார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


Pengarang :