SELANGOR

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பராமரிப்பு தேவைகள் குறித்து ஒரு வழிகாட்டி  தொகுப்பு (மோடுயுல்) அறிமுகப் படுத்தப்படும்

சுபாங் ஜெயா, ஜூலை 18: மாற்றுத்திறனாளி குழந்தைகளின் விழிப்புணர்வு மற்றும் பராமரிப்பு தேவைகள் குறித்து ஒரு   வழிகாட்டி  தொகுப்பு (மோடுயுல்) சிலாங்கூரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

சிறப்பு குழந்தைகளின் வளர்ச்சியை பெற்றோர்கள் நிர்வகிக்கவும் கண்காணிக்கவும் இந்த  வழிகாட்டி தொகுப்பு  உருவாக்கப்பட்டது என்று சமூக நலன் ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.

“சிலாங்கூர் சிறப்புக் குழந்தைகள் துறையின் (அ) கீழ், எங்களிடம் சிலாங்கூர் மாற்றுத்திறனாளிகள் செயல் கவுன்சில் (OKU) உள்ளது. மேலும் இந்தத் தொகுதியை உருவாக்க பெர்மாத்தா கூர்னியா மற்றும் யுனிவர்சிட்டி டெக்னாலஜி மாராவை சேர்ந்த இரு ஆலோசகர்களை நியமித்துள்ளோம்.

“தொகுப்பு இப்போது முதல் வரைவு நிலையில் உள்ளது மற்றும் அறிமுகப்படுத்துவதற்கு முன் இந்த மாத இறுதியில் அதை பற்றி விவாதிக்கப்படும்,” என்று அன்ஃபால் சாரி கூறினார்.

சிறப்புக் குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிக்க சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறையின் குறிப்புகளாகவும் இந்த தொகுதி பயன்படுத்தப்படலாம் என்றும் அன்ஃபால் விளக்கினார்.


Pengarang :