NATIONAL

இன்று நூர் ஃபாரா கார்தினியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்

சுங்கை பூலோ, ஜூலை 18: இன்று நூர் ஃபாரா கார்தினி அப்துல்லாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் உமார் கான் தெரிவித்தார்.

உலு சிலாங்கூரில் உள்ள கம்போங் ஸ்ரீ கிலேடாங்கில் உள்ள செம்பனை தோட்டப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உடல் நூர் ஃபாரா கார்தினியின் (25) உடையதுதான் என டிஎன்ஏ பரிசோதனை உள்ளிட்ட பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

நேற்று, வேதியியல் துறையால் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் எடுக்கப்பட்ட டிஎன்ஏ மேட்ச் சோதனை முடிவுகளின் அடிப்படையில் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப் படும் என்று ஹுசைன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

“உடல் கம்போங் நியுர் மானிஸ், பெக்கனில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்படும். மேல் விவரங்கள் பின்னர் பகிரப்படும்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, சுங்கை பூலோ மருத்துவமனையின் தடயவியல் துறையில் நடத்தப்பட்ட ஆய்வில், நூர் ஃபாரா கார்தினியின் குடும்பத்தினர் உடலை பெறுவதற்காகக் காலை 11.10 மணிக்கு வந்தனர்.

ஜூலை 10 ஆம் தேதி அன்று வாடிக்கையாளருக்கு வாடகைக் காரை வழங்கிய பின்னர் நூர் ஃபாரா கார்தினி காணாமல் போனதாகக் கூறப்படுகிறது, மேலும் அவரது உடல் திங்கள்கிழமை மாலை 6 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, குற்றவியல் சட்டப் பிரிவு 302இன் கீழ் வழக்கு தொடர்பான விசாரணையில் உதவுவதற்காகப் பேராக்கில் பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரியான 26 வயது நபர் கைது செய்யப்பட்டு ஜூலை 22 வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

– பெர்னாமா


Pengarang :