SELANGOR

குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களை இழுத்துச் செல்லும் நடவடிக்கை அமல் – எம்பிடிகே

ஷா ஆலம், ஜூலை 19: குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களை இழுத்துச் செல்லும் நடவடிக்கைகளை கிள்ளான் மாநகராட்சி (எம்பிடிகே) அமல்படுத்தியது.

குடியிருப்பாளர்களிடமிருந்து பல புகார்களைப் பெற்றதையடுத்து இந்த நடவடிக்கை இம்மாதம் செயல்படுத்தப் பட்டதாக அதன் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் இயக்குனர் நோர்பிசா மஹ்ஃபிஸ் கூறினார்.

“இந்த நடவடிக்கை, போக்குவரத்து பயனர்கள், குறிப்பாகக் கனரக வாகனங்களை இயக்குபவர்கள் அல்லது அதன் உரிமையாளர்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிவதில் மிகவும் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.” என அவர் அறிக்கை மூலம் தெரிவித்தார்.

வடக்கு துறைமுகம், தெற்கு துறைமுகம் மற்றும் மேற்கு துறைமுகம் ஆகியவை ஒவ்வொரு நாளும் கனரக வாகனங்களின் வருகைக்கு பங்களிக்கும் காரணிகளில் ஒன்றாகும் என்று நூர்ஹவிசா விளக்கினார்.

“இந்த துறைமுகங்களினால் வாகனங்கள் குறிப்பாகக் கன்டெய்னர்கள் மற்றும் வணிக லாரிகளை கொண்டு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை இந்த நகரத்தில் மிக அதிகமாக உள்ளன. இதனால் எம்பிடிகே அடிக்கடி புகார்களைப் பெறுகிறது,” என்று அவர் கூறினார்.

ஏதேனும் தகவல் அல்லது விசாரணைகளுக்குக் கட்டணமில்லா தொலைபேசி எண் 1-800-88-23826 அல்லது எம்பிடிகே அமலாக்கத் துறையின் அலுவலகத்தை 03-3374 8845 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


Pengarang :