நாட்டின் 17வது மாமன்னராக சுல்தான் இப்ராஹிம் இன்று அரியணை அமர்ந்தார்

கோலாலம்பூர், ஜூலை 20- நாட்டின் 17 மாமன்னராக சுல்தான் இப்ராஹிம் இன்று அதிகாரப்பூர்வமாக அரியணை அமர்ந்தார். இந்த வரலாற்றுப்பூர்வ நிகழ்வு இங்குள்ள இஸ்தானா நெகாராவில் இன்று காலை நடைபெற்றது.

இந்த முடிசூட்டு விழாவில் உரையாற்றிய அவர், தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை அனைத்து மக்களுக்கும் நேர்மையாகவும் உண்மையாகவும் நடுநிலையாகவும் நிறைவேற்றப் போவதாக வாக்குறுதியளித்தார்.

நாட்டின் சுபிட்சம் மற்றும் இறையாண்மையைக் காப்பதற்காக இந்த பொறுப்பினைத் தாம் செம்மையுடன் நிறைவேற்றவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் தலைவர் பொறுப்பை வகிப்பதற்கும் மக்களின் நம்பிக்கையைச் சுமப்பதற்கும் என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பினை வழங்கிய அனைத்து மலாய் ஆட்சியாளர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

இறைவன் அருளால், எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பினை நாட்டின் சுபிட்சம் மற்றும் இறையாண்மைக்காக நேர்மையாகவும் உண்மையாகவும் பாகுபாடின்றியும் நிறைவேற்றுவேன் என்றார் அவர்.

மக்களின் சுமையைக் குறைப்பதற்கு அரசாங்கம் தொடர்ந்து பாடுபடும் என்பதோடு மலேசியாவை சுபிட்சமும் வளப்பமும் கொண்ட நாடாக உருவாக்கும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக அவர் தமதுரையில் குறிப்பிட்டார்.


Pengarang :