NATIONAL

மலேசியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ;குறைந்த சர்க்கரை, குறைந்த விலை பிரச்சாரம் அறிமுகப்படுத்தப்படும்

புத்ராஜெயா, ஜூலை 21: தினசரி உணவில் சர்க்கரை அளவைக் குறைப்பதன் மூலம்
ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் முக்கியத்துவம் குறித்து மலேசியர்களுக்கு
விழிப்புணர்வை ஏற்படுத்த குறைந்த சர்க்கரை, குறைந்த விலை பிரச்சாரம்
அறிமுகப்படுத்தப்படும்.

இப்பிரச்சாரத்தை வடிவமைப்பதற்காக உணவகச் சங்கங்கள் மற்றும் தொழில்துறை
பிரதிநிதிகளுடன் அமர்வு ஒன்றை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு
துணை அமைச்சர் பெளசியா சாலே நடத்தினார்.

இதில் கலந்துகொண்டவர்களில் மலேசிய இந்திய உணவக ஆப்ரேட்டர்கள் சங்கம்
(பிரிமாஸ்), மலேசியன் சிங்கப்பூர் பொது காபி கடை உரிமையாளர்கள் சங்கம்
(எம்எஸ்சிஎஸ்பிஜிஏ) மற்றும் மலேசிய முஸ்லிம் உணவக ஆபரேட்டர்கள் சங்கம்
(பிரெஸ்மா) ஆகியவை அடங்கும்.

இந்த திட்டம் குறிப்பாக மலேசியர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை
மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆரோக்கியமற்ற மற்றும்
சமநிலையற்ற உணவுப் பழக்கம், குறிப்பாக அதிகப்படியான சர்க்கரை உள்ளடக்கம்
ஆகியவற்றால் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சை மற்றும் மருத்துவ பின் தொடர்தல்
செலவைக் குறைக்க உதவுகிறது,என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தேசிய சுகாதாரம் மற்றும் நோயுற்ற ஆய்வு (NHMS) 2023 அறிக்கையைக் குறித்து
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் வருத்தம் கொண்டுள்ளது,
இந்த நாட்டில் ஆறில் ஒருவர் அல்லது 15.6 சதவீதம் பேர் சர்க்கரை நோயால்
பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

நுகர்வோர் மற்றும் சமைத்த உணவு ஆபரேட்டர்கள் அளவில் பல தடுப்பு
நடவடிக்கைகளை தொடங்குவதற்கு உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு
அமைச்சகம் உறுதிபூண்டுள்ளதாக அவர் கூறினார்.

விரைவில் இந்த பிரச்சாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.


Pengarang :