NATIONAL

2025இல் மியன்மார் தேர்தல்- ஜூந்தா அரசின் வாக்குறுதிக்கு அரசியல் கட்சிகள்  வரவேற்பு

அங்காரா, ஜூலை 26 – மியான்மாரில் அடுத்தாண்டு பொதுத் தேர்தலை நடத்த  ஜூந்தா அரசு உறுதியளித்ததை அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளதாக அனாடோலு செய்தி நிறுவனம் தெரிவித்தது .

ஐந்து அம்ச திட்ட வரைவை  செயல்படுத்த மாநில நிர்வாக மன்றம் எடுத்துள்ள  உறுதியான முடிவு இதுவாகும்  என்று அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளதாக மியான்மார் தகவல் அமைச்சு வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு தேர்தலை நடத்த அரசாங்கம் தயாராகி வருகிறது என்ற செய்தியானது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயக அரசாங்கத்தின் உருவாக்கத்திற்கான நோக்கமாகும்.

இது தற்காப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் தப்பிக்கும் முயற்சி அல்ல. மேலும் அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து மக்களும்  தப்புவதற்கான  சிறந்த நடவடிக்கை என்று நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று அது கூறியது

நீண்ட காலமாக தாமதமடைந்து வரும்  தேர்தலை அடுத்த ஆண்டு நடத்துவதாக ஜுந்தா தலைவர் மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லேயிங் கடந்த மாதம் அறிவித்தார்.

ஆங் சான் சூகியின் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மியான்மார் இராணுவம் 2021  பிப்ரவரியில் தூக்கி எறிந்து இராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது.

தங்களின் எதிரிகள் என்று கருதப் பட்டவர்களுக்கு எதிராக இராணுவம் கோரத்தனமான அட்டூழியங்களை  நடத்தியதால் நாடு ஆழ்ந்த சமூக, அரசியல் மற்றும் பொருளாதார கொந்தளிப்பில் விழுந்தது.

ராணுவம் மற்றும் ஆயுதமேந்திய எதிர்ப்பு குழுக்களுக்கு இடையே கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் சண்டை தீவிரமடைந்து மியான்மரின் பெரும்பாலான பகுதிகளுக்குப் பரவியது.

கடந்த  2021 பிப்ரவரி ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு 2,470 க்கும் மேற்பட்ட வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  இதன் விளைவாக 1,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.


Pengarang :