NATIONAL

சாப்டா சிலாங்கூரின் வடக்குப் பகுதியில் பொருளாதாரத்தை மேம்படுத்தும்

கோலாலம்பூர், ஜூலை 26: சபாக் பெர்ணம் மேம்பாட்டுப் பகுதி (சாப்டா) சிலாங்கூரின் வடக்குப் பகுதியில் பொருளாதார ஆற்றலைத் திறக்கக்கூடிய ஒரு முதன்மை இயக்கமாகக் கருதப்படுகிறது.

எவ்வாறாயினும், இப்பகுதி பல்வேறு பொருளாதார சவால்களை எதிர்கொள்கிறது. அதாவது இயற்கை வளங்களை கொண்டிருந்தாலும், விரிவான வளர்ச்சி தேவைப்படுகிறது என உள்ளூர் அரசாங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

“உதாரணமாக, சிலாங்கூரில் பெரும்பாலான மீன்பிடி நடவடிக்கைகள் சபாக் பெர்ணம் பகுதியில் நடைபெறுகின்றன. ஆனால் ஜெட்டி முழு கொள்ளளவைக் கொண்டுள்ளது.

“அதிக கப்பல்கள் கொண்டிருப்பதன் காரணம் கடல்சார் பொருட்களுக்கான அதிகரிக்கும் தேவைக்கு இடமளிக்க நமக்கு அதிக இடவசதி தேவை என்று அர்த்தம்” என டத்தோ இங் சூயி லிம் நேற்று சிலாங்கூர் ஜேர்னலிடம் தெரிவித்தார்.

சிலாங்கூர் சர்வதேச வணிக உச்சி மாநாட்டின் (SIBS) கீழ் நேற்று முதல் சனிக்கிழமை வரை நடைபெறும் சிலாங்கூர் தொழில் பூங்கா கண்காட்சியில் (SPARK) அவர் இவாறு கூறினார்.

இதற்கிடையில், இந்நிகழ்வைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், மற்ற மாநிலங்களுக்குக் குறிப்பாக விவசாயம் மற்றும் மீன் வளர்ப்பில் சிலாங்கூரை ஓர் அளவுகோலாக சாப்டா மாற்றும் என்றார்.

முதல் சிலாங்கூர் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட இந்த முயற்சி, கடல் உணவுப் பொருளாதாரத்தை இயக்குவது, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் வேளாண் சுற்றுலாவை மேம்படுத்துவது என்று அவர் விளக்கினார்.

“சபாக் பெர்ணம் இயற்கை வளங்கள் நிறைந்தது மட்டுமின்றி, உள்ளூர்வாசிகளுக்கு வருமானம் ஈட்டக்கூடிய அழகிய நிலப்பரப்புகள் மற்றும் தனித்துவமான ஈர்ப்புகளையும் கொண்டிருக்கிறது,” என்று அவர் கூறினார். 2025 சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் என்பதற்கேற்ப இந்தத் துறை வளரும் என்று அவர் நம்பினார்.

சாப்டாவின் கீழ் உள்ள திட்டங்களில் சுங்கை லாங்கில் மீன் வளர்ப்பு, சிகிஞ்சானில் மீன் இறங்கும் வளாகம், பாகன் சுங்கை புசாரில் ஒரு மீன்பிடி ஜெட்டி வளாகத் திட்டம் மற்றும் சுங்கை பஞ்சாங்கில் மின்மினிப் பூச்சி பூங்கா மேம்பாடு திட்டம்  ஆகியவை அடங்கும்.


Pengarang :