NATIONAL

இரு சகோதரர்களுடன் காரைச் செலுத்திய 14 வயதுச் சிறுவனின் பெற்றோர் அடையாளம் காணப்பட்டனர்

கோலாலம்பூர், ஜூலை 30 – சிப்பாங்கிலுள்ள வீடமைப்பு பகுதி ஒன்றில் இரு
சகோததர்களுடன் காரைச் செலுத்திய 14 வயதுச் சிறுவனின் பெற்றோரை
காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடரபில் விசாரணை நடத்தி அடுத்தக் கட்ட நடவடிக்கை
எடுப்பதற்கு ஏதுவாக அந்தச் சிறுவனின் பெற்றோரை காவல் துறையினர்
தொடர்பு கொள்வர் என்று புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை
மற்றும் அமலாக்கத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது யூஸ்ரி
ஹசான் பாஸ்ரி கூறினார்.

மிகுந்த கவனப் போக்கை கடைபிடிக்கும்படி பெற்றோர்களை அறிவுறுத்திய அவர், வயது குறைந்த மற்றும் லைசென்ஸ் இல்லாத பிள்ளைகளை வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

தனது இரு சகோதரர்களை காரில் ஏற்றிக் கொண்டு பெரேடுவா வீவா
காரில் வீடமைப்புப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த 14 வயதுச்
சிறுவனை அக்குடியிருப்பைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தடுத்து
நிறுத்தியதைச் சித்தரிக்கும் 1 நிமிடம் 49 விநாடி காணொளி சமூக
ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

வீட்டின் அருகில் இருந்த வேகக் கட்டுப்பாட்டு மேட்டை வேகமாக கடந்த
அந்த காரை பெண்மணி ஒருவர் தடுத்து நிறுத்தும் காட்சி அந்த
காணொளியில் பதிவாகியிருந்தது.

அச்சிறுவன் செலுத்திய அக்கார் அந்த பகுதியை பல முறை கடந்ததாகவும்
இதன் தொடர்பில் தாம் காவல் துறையில் புகார் செய்யவுள்ளதாகவும்
அந்த பெண் கூறியிருந்தார்.


Pengarang :