NATIONAL

எல் ஆர் டி3 அடுத்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் செயல்பாட்டுக்கு வரும்

கிள்ளான், ஜூலை 30 – சிலாங்கூரில் உள்ள பண்டார் உத்தாமாவிலிருந்து ஜோஹன் செத்தியா வரையிலான இலகு ரயில் போக்குவரத்து 3 இன் (எல் ஆர் டி3) பணிகள் 95.6 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்த பாதை செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுவதாகவும் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

20 நிலையங்களை உள்ளடக்கிய சீரமைப்புக்கான கட்டுமானப் பணிகள் அக்டோபரில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 தொற்றுநோய்களின் போது பணிகள் மேற்கொள்ள முடியாததால், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தின் அசல் இலக்கிலிருந்து இத் திட்டம் சற்று தாமதமாகியுள்ளதாக லோக் கூறினார்.

தோரோபிகானா, தெமாஸ்யா, ராஜா மூடா, புக்கிட் ராஜா மற்றும் பண்டார் பொட்டானிக் ஆகிய ஐந்து நிலையங்களை உள்ளடக்கிய எல்ஆர்டி3இன் அசல் நோக்கத்தை மீண்டும் நிறுவ ஜூலை 5 அமைச்சரவையில் ஒப்புக் கொள்ளப்பட்டதாக லோக் கூறினார்.

ஐந்து நிலையங்களின் மறுசீரமைப்பு பொதுப் போக்குவரத்தை குறிப்பாகக் கிள்ளான் பள்ளத்தாக்கில் அவற்றின் பயன்பாட்டை மேம்படுத்துவதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது என்று லோக் கூறினார்.

அதுமட்டுமில்லாமல், ரத்து செய்யப்பட்ட அதாவது RM4.7 பில்லியன் செலவை உள்ளடக்கிய தோரோபிகானா, தெமாஸ்யா, ராஜா மூடா, புக்கிட் ராஜா மற்றும் பண்டார் பொட்டானிக் ஆகிய ஐந்து நிலையங்களின் உத்தேச கட்டுமானத்தை அரசாங்கம் மீண்டும் தொடங்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது அறிவித்தார்.

இலகு ரயில் 3 இன் திட்டம், பண்டார் உத்தாமாவில் தொடங்கி ஜோஹான் செத்தியாவில் முடிவடைகிறது. இதற்கு தோராயமாக RM16 பில்லியன் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– பெர்னாமா


Pengarang :