NATIONAL

குழந்தைப் பருவக் கல்வி மையங்களை அரசாங்கம் மேம்படுத்தும்

கோலாலம்பூர், ஜூலை 30 – பதிவு, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பாடத்திட்டத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் குழந்தை பருவக் கல்வி மையங்களை அரசாங்கம் மேம்படுத்தும் என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் கூறினார்.

அவர் தலைமை தாங்கிய ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்வி நிறுவனங்களின் ஸ்தாபனம் மற்றும் செயல்பாட்டின் ஒருங்கிணைந்த ஒழுங்குமுறை தொடர்பான சிறப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டது என்றார்.

“இந்த கூட்டத்தில் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி, துணை ஊரக மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ரூபியா வாங் மற்றும் சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய ஒற்றுமை அமைச்சகத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்” என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

மலேசியாவில் குழந்தை பருவ கல்வி நிறுவனங்களின் மீது சமூகத்தின் நம்பிக்கையை மேம்படுத்துவதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது என்றார்.

“இந்த விவாதத்தின் முடிவு நாடு முழுவதும் உள்ள குழந்தை பருவ கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதில் மிகவும் பயனுள்ள மற்றும் விரிவான நடைமுறைக்கு வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், குழந்தை பருவ கல்வி என்பது பகிரப்பட்ட பொறுப்பு என்றும், தரமான கல்வி முறையை உறுதிப்படுத்த முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும் நான்சி முகநூல் பதிவில் தெரிவித்தார்.


Pengarang :