ANTARABANGSANATIONAL

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 8 வது நாளான நேற்று அமெரிக்கா மீண்டும் தலை தூக்கியது

பாரிஸ், ஆகஸ்ட் 2 – பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 8  வது நாளான நேற்று பதக்க வரிசையில்  அமெரிக்கா மீண்டும் தலைதூக்க முற்பட்டுள்ளது.  நேற்று ஒரே நாளில்  5 தங்கம்  6 வெள்ளி மற்றும் 5 வெங்கலம் பெற்று இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது, அதே வேளையில் சீனாவும் நேற்று 3 தங்கம் மற்றும் 3 வெள்ளி பதக்கம் பெற்று பதக்க பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டது. சீனாவின் ஆதிக்கம்  தொடர்கிறது. மலேசியாவின் பூப்பந்து வீரர்களுக்கு  அதிர்ச்சி அளிக்கும் தோல்விகள் தொடர்கின்றன.

Pengarang :