ANTARABANGSA

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 12 வது நாளில் ஆஸ்திரேலியா 4 தங்கப் பதக்கத்தை வென்றது

பாரிஸ், ஆகஸ்ட் 8 – பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 12  வது நாளான நேற்று ஆஸ்திரேலியா 4 தங்க பதக்கங்களை வென்றது. அந்நாடு பதக்க வரிசையில் 3வது இடத்தில் உள்ளது.  அமெரிக்கா பதக்க வரிசையில்  தனது முதல் நிலையை  தற்காத்துக் கொண்டது. அமெரிக்கா  நேற்று ஒரே நாளில்  3 தங்கம்  4 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் பெற்று முதல் இடத்தை தற்காத்துக் கொண்ட வேளையில்  நேற்று சீனா  3 தங்கம் மற்றும் 2 வெள்ளி ,1 வெண்கலம்  பதக்கம் பெற்று பதக்க பட்டியலில் இரண்டாவது  இடத்தில் உள்ளது.
மலேசியாவின் பூப்பந்து விளையாட்டாளர்கள்  நேற்று நாடு திரும்பி விட்ட நிலையில், மலேசியாவின் ஆண்  மற்றும் பெண்  சைக்கிள் ஓட்ட  வீரர்களிடமிருந்து மகிழ்ச்சியான செய்திக்கு மலேசியர்கள் காத்திருக்கின்றனர். மேலும் டைவிங், கோல்ப், பலு தூக்குதல் படகு ஓட்டம்  போன்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில்  மலேசியா இன்னும் பங்கு கொண்டாலும்  பதக்கம் வெல்லும் நிலையை எந்த விளையாட்டு  வழங்க போகிறது  என்பதை  பொறுத்திருந்து காண்போம்.

Pengarang :