NATIONAL

இரண்டு வயது சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணையில் பாரமரிப்பாளருக்கு 6  நாட்கள் தடுப்பு காவல்

ஈப்போ, ஆகஸ்ட் 8: இரண்டு வயது சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணையில்
உதவுவதற்காக கைது செய்யப்பட்ட குழந்தை பராமரிப்பாளர் இன்று தொடங்கி
ஆகஸ்ட் 13 வரை ஆறு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

இன்று காலை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அந்த 30 வயதுடைய பெண்ணுக்கு எதிரான
விளக்கமறியல் உத்தரவு காவல்துறையின் விண்ணப்பத்தை மஜிஸ்திரேட் ஃபரா நபிஹா
முஹமட் டானினால் பெறப்பட்ட பின்னர் பிறப்பிக்கப்பட்டது.

குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31(1)(a) இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக
அப்பெண் நேற்று மதியம் கைது செய்யப் பட்டதாகப் பேராக் காவல்துறைத் தலைவர்
டத்தோ அசிசி மாட் அரிஸ் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை இரவு 7.20 மணி அளவில் குழந்தையின் தந்தையிடமிருந்து
காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச்
செல்லப்பட்ட சிறுமி செவ்வாய்க்கிழமை இரவு 11.10 மணி அளவில் குழந்தை மருத்துவ
அதிகாரியால் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.

பிரேதப் பரிசோதனையில், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் தான் மரணத்துக்குக்   காரணம் என்று தெரியவந்தது.

– பெர்னாமா


Pengarang :