நிதி நெருக்கடி பிரச்சனையை எதிர்கொண்டுள்ள சமூக ஆர்வலருக்குப் பிரதமர் நன்கொடை வழங்கினார்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 8: நிதி நெருக்கடி பிரச்சனையை எதிர்கொண்டுள்ள  சமூக ஆர்வலர் முகமட் ஷம்சூரி அலியாஸ் அவர்களுக்கு உதவுவதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நன்கொடை வழங்கினார்.

சமீபத்தில் சியாரா மடாணி மூலம் முகமட் ஷம்சூரியை சந்தித்த அவரது அரசியல் செயலாளர் அஹ்மட் ஃபர்ஹான் ஃபௌசி மூலம் இந்த நன்கொடை வழங்கப் பட்டதாக அன்வார் கூறினார்.

பிகேஆரின் கோத்தா ராஜா கிளையில் கட்சி ஸ்தாபனத்தின் தொடக்கத்திலிருந்தே முகமட் ஷம்சூரி செயல்பட்டு வருகிறார் என்று பிரதமர் கூறினார்.

1998ஆம் ஆண்டிலிருந்து போராடிய சீர்திருத்த ஆர்வலர்களின் சேவைகள் மற்றும் தியாகங்கள் என்றும் நினைவுகூரப்படும், என்று அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இந்த நன்கொடை முகமட் ஷம்சூரி மற்றும் அவரது குடும்பத்தின் வாழ்க்கைச் செலவுகளின் சுமையைக் குறைக்க உதவும் என்று பிரதமர் நம்புகிறார்.

– பெர்னாமா


Pengarang :