NATIONAL

ஓராங் அஸ்லி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு RM500,000 ஒதுக்கீடு

ஷா ஆலம், ஆகஸ்ட் 9: இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு ஓராங் அஸ்லி மேம்பாட்டுத் திட்டங்களை வெற்றியடையச் செய்ய சிலாங்கூர் RM500,000 ஒதுக்கீடு செய்துள்ளது.

கல்வித் திட்டங்கள், குடியிருப்புகளை மேம்படுத்தும் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு பழுதுபார்ப்பு களுக்காக ஜூலை மாதம் வரை RM246,832  வழங்கப்பட்டது என ஓராங் அஸ்லி விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டு கூறினார்.

“ஓராங் அஸ்லி கிராமத்தில் கோத்தோங்-ரோயோங் நிகழ்ச்சியும், தலைமைத்துவத்தை வலுப்படுத்தும் பட்டறையும் நடைபெற்றது.

“ஓராங் அஸ்லியின் தேவைகள் எப்போதும் பூர்த்தி செய்யப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம், குறிப்பாக நிலத்தின் எல்லை நிர்ணயம் மற்றும் அவர்களின் உள்கட்டமைப்பின் மேம்பாடு ஆகியவை அடங்கும்,” பாப்பாராய்டு கூறினார்.

உலக பழங்குடியினர் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், வளர்ச்சியின் ஓட்டத்தில் இருந்து ஓராங் அஸ்லி சமூகத்தினர் விடுபடாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு அவர்களின் நலனில் எப்போதும் முன்னுரிமை அளிக்கிப்படுகிறது.

“அவர்களிடையே கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது இதில் அடங்கும். அவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வியைத் தொடர சிறப்பு சாகோங் தாசி உதவித்தொகை திட்டம் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசு தயாராக உள்ளது.

முன்னதாக, சிலாங்கூர் மற்றும் கூட்டரசு பிரதேசங்கள் அளவிலான ஓராங் அஸ்லி தினக் கொண்டாட்டம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி உலு சிலாங்கூரில் உள்ள ஓராங் அஸ்லி கிராமமான செரிகலாவில் நடைபெற உள்ளதாகப் பாப்பாராய்டு தெரிவித்தார்.

“இந்நிகழ்வில் கலாச்சார நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு சுவாரசியமான நடவடிக்கைகள் நடைபெறும் மற்றும் சுமார் 500 விருந்தினர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

உலக பழங்குடியின மக்களின் உரிமைகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் மற்றும் உலகளாவிய நிலையில் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 அன்று உலக பழங்குடி மக்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

இன்று தேசிய அளவில், இந்த ஆண்டுக்கான கொண்டாட்டம் தொண்டோங் பாவ் சரவாக்கில் நடைபெறும்.


Pengarang :