NATIONAL

மூன்று பேரை கொலை செய்த வழக்கில் சந்தேகத்திற்குரிய  நபர் தலைமறைவு

மூவார், ஆகஸ்ட் 12: கடந்த வெள்ளிக்கிழமை கம்போங் பாயா ரெடான், பாகோவில் மூன்று பேர் கொண்ட ஒரு குடும்பத்தை கொலை செய்த  குற்றத்தில்  முக்கிய சந்தேக நபரை காவல்துறை தேடி வருகிறது.  அந்நபர் சிவப்பு ஹோண்டா வேவ் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது.

சந்தேக நபர் அஸ்மான் முகமட் நோர் (48) என அடையாளம் காணப்பட்டார். அந்நபர் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு தப்பிச் சென்று இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது என மூவார் மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் ராயிஸ் முக்லிஸ் அஸ்மான் அசிஸ் கூறினார்.

“தகவல்களின் அடிப்படையில், சந்தேக நபர் சம்பவத்திற்குப் பிறகு (அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூவரைக் கொன்றதாக நம்பப்படுகிறது) வீட்டுக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

“சந்தேக நபர் இன்னும் ஜோகூர் மாநிலத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது, மேலும் அவர் தங்காக், செகாமட் அல்லது பத்து பஹாட்டில் பதுங்கி இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை காவல்துறையினர் நிராகரிக்கவில்லை,” என்று முக்லிஸ் அஸ்மான் கூறினார்.

சந்தேக நபருக்கு முந்தைய குற்றப் பதிவு எதுவும் இல்லை.

அதிகாலை 1.30 மணியளவில் நடந்த ஒரு இச்சம்பவத்தில், அஸ்மான் தனது பெற்றோர் அரா அப்துல் ஹமீட் (76) , முகம்ட் நோர் மொஹமட் யாசின் (82), மற்றும் அவரது மருமகள் நோராத்ரியானா நோர் ஹசிம் (11), ஆகியோரைக் கொன்றதாகச் சந்தேகிக்கப் படுவதால் தலைமறைவாக உள்ளார்.

– பெர்னாமா


Pengarang :